IPL 2020: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்; விராட் படையும் தயார்
ஐபிஎல் 2020: முந்தைய தோல்வியின் வருத்தத்தில் இருந்து மீள இரண்டு அணிகளும் விளையாடக்கூடும். விராட் மற்றும் ஸ்மித் நேருக்கு நேர். வெற்றி பெறுவது யார்?
Rajasthan Royals vs Royal Challengers Bangalore: ஐபிஎல் 13 வது சீசனில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும். முதல் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையே நடைபெறும். இரு அணிகளும் தங்களது ஒன்பதாவது போட்டியில் விளையாடும். இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மதியம் 3:30 மணி முதல் துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் தொடங்கும். இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணி டாஸ் (Toss) வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இரு அணிகளும் முந்தைய போட்டிகளில் தோல்வியடைந்துள்ளன. ராஜஸ்தான் டெல்லி அணியும், பெங்களூரை பஞ்சாப் அணியும் தோற்கடித்தது. இந்த சீசனில் இதுவரை இரு அணிகளும் எட்டு போட்டிகளில் விளையாடியுள்ளன. பெங்களூர் (Royal Challengers Bangalore) எட்டு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வென்றது, மூன்று போட்டிகளில் தோற்றது.
மறுபுறம், ராஜஸ்தான் மூன்று போட்டிகளில் வென்றுள்ளது, அதே நேரத்தில் ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. புள்ளி பட்டியலை பற்றி பேசினால், ஆர்.சி.பி 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் கணக்கில் ஆறு புள்ளிகள் மட்டுமே உள்ளன மற்றும் அட்டவணையில் ஏழாவது இடத்தில் உள்ளன.
ALSO READ | IPL 2020: அனுஷ்கா சர்மா விராட் கோலிக்கு கொடுத்த Flying Kiss, வைரலாகிய படங்கள்..!!!
ஸ்டீவ் ஸ்மித்தின் (Steve Smith) தலைமையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் அந்த அணி தொடர்ந்து வெற்றி பெற முடியவில்லை. மூன்று தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு, அந்த அணி ஒரு போட்டியில் வென்றது, பின்னர் டெல்லிக்கு எதிரான முந்தைய போட்டியில் தோற்றது. பென் ஸ்டோக்ஸின் வருகையால் அணி நிச்சயமாக வலுப்பெற்றது. ஆனால் தொடக்க ஜோடி பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் ஆடுகளத்தில் நிலைத்து நின்று விளையாட வேண்டியிருக்கும்.
மறுபுறம், ஆர்.சி.பியின் குழு இந்த முறை அவர்களின் தாளத்தில் இருப்பதாக தெரிகிறது. அணியின் கேப்டன் விராட் கோலியும் (Virat Kohli) ஃபார்மில் உள்ளார். கடந்த போட்டியில் அவர் தனது அரைசதத்தை தவறவிட்டார். அவர் 48 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தானுக்கு எதிராக கோஹ்லி மாறும் டிவில்லியர் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள்.
ALSO READ | IPL 2020: ராஜஸ்தான் ராயல்ஸின் ஸ்டீவ் ஸ்மித்க்கு 12 லட்சம் ரூபாய் அபராதம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
ஆரோன் பிஞ்ச், தேவதாட்டா பாடிக்கல், விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, கிறிஸ் மோரிஸ், இசுரு உதனா, நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, ரியான் பராக், ராகுல் தியோடியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், ஜெய்தேவ் உனட்கட், கார்த்திக் தியாகி.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR