கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடங்கியது.  ஐக்கிய அமீரகத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெறுகின்றன.  IPL 2021 30வது போட்டியில் இன்று சிஎஸ்கே - மும்பை அணிகள் மோதின.  டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.  சாம் கரண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் ஹேசல்வுத் அணியில் இடம் பெற்றார்.  மும்மை அணியில் ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டியில் விளையாடவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது.   டு பிளாசி, மொயின் அலி அடுத்தடுத்து ரன் எடுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.  ராயுடு பேடிங்கின் போது கையில் அடி பட்டதால் அவரும் பெவிலியன் சென்றார்.  அதன் பின் ரெய்னாவும் 4 ரங்களுக்கு வெளியேற சிஎஸ்கே அணி 7 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது.   பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனியும் 3 ரன்களில் அவுட் ஆக 24 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. 


இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்வி உறுதி என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர தொடங்கினர்.  இப்படி பட்ட இக்கட்டான சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த ருத்ராஜ் மற்றும் ஜடேஜா கூட்டணி அணியை சரிவில் இருந்து மீட்டது.  சிறப்பாக ஆடிய ருத்ராஜ் 58 பந்துகளில் 88 ரன்கள் விளாசினார்.  பிராவோ தன் பங்கிற்கு 8 பந்துகளில் 3 சிக்சருடன் 23 ரன்கள் விளாசினார்.  இறுதியாக 20 ஓவர் முடிவில் 50 ரன்கள் தான்டுமா என்று எதிர்பார்த்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. 



மும்பை அணி பெரிய சவால் இல்லாத இலக்கை அடிக்க தொடங்கியது.  ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட இந்த போட்டி சிஎஸ்கே கைவிட்டு சென்றது.  அதன் பின் சிஎஸ்கே பவுளர்களின் சிறப்பான பந்து வீச்சால் மும்மை அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது.  இறுதியாக மும்பை அணி 20 ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  சிஎஸ்கே சார்பில் பிராவோ 3 விக்கெட் மற்றும் தீபக் சகார் 2 விக்கெட்களும் வீழ்த்தினார்.



இதன் மூலம்  சிஎஸ்கே  அணி புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்தது.  தோக்குரவன் ஜெய்பான், ஜெய்க்குரவன் தோப்பான் என்ற பழமொழிக்கேற்ப இன்றைய போட்டி அமைந்தது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR