IPL 2021 தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.முன்னதாக டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவெடுத்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆட்டம் தொடங்கியதுமே, சென்னை அணி 7 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரெய்னா, மொயின் அலி இருவரும்  ஓரளவுக்கு ஆடி, அணிக்கு சிறிது ரன் சேர்த்தனர்.
 
சுரேஷ் ரய்னா 54 ரன்கள் எடுத்தார். அபாரமாக ஆடுவார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி, ரன்கள் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். 


இறுதியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து தில்லி கேபிடல்ஸ் அணிக்கு 189 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.


189 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் டெல்லி கேபிடஸ் அணி களமிறங்கியது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஷிகர் தவான், பிரித்வி ஷா இருவரும் அற்புதமாக ஆடி ரன்களை குவித்தனர்.


இறுதியில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷர்துல் தாக்கூர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


IPL 2020-ல் சென்னை அணியின் தோல்வியால் பெரும் ஏமாற்றத்தை அடைந்த CSK ரசிகர்கள் இந்த ஆண்டு தங்கள் அணி வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில், இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் தோல்வி அதன் ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். 


முன்னதாக, டெல்லி கேப்பிடல்சுக்கு எதிரான தங்களது முதல் ஆட்டத்திற்காக சென்னை வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். வான்கடே மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள சென்னை வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர். ஆனால், இன்றைய தோல்வியினால் ரசிகர்கள் உற்சாகம் இழந்து விட்டனர் எனலாம்.


ALSO READ | பும்ராவிற்காக நீல நிற உடை அணிந்த சஞ்சனா கணேசன்; True Love என ரசிகர்கள் பாராட்டு


 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR