பும்ராவிற்காக நீல நிற உடை அணிந்த சஞ்சனா கணேசன்; True Love என ரசிகர்கள் பாராட்டு

கிரிக்கெட் போட்டி பரபரப்பான திருப்பங்களுடன் நடந்து கொண்டிருந்தபோது, ​​ சஞ்சனா கணேசன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலும்  ஸ்டூடியோவில் அதை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 10, 2021, 02:24 PM IST
  • சஞ்சனா கணேசன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலும் ஸ்டூடியோவில் அதை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.
  • ஜஸ்ப்ரித் பும்ரா, இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர பந்துவீச்சாளர் என்ற புகழை பெற்றுள்ளார்.
  • மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) முதல் போட்டியில் தோல்வியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
பும்ராவிற்காக நீல நிற உடை அணிந்த சஞ்சனா கணேசன்; True Love என ரசிகர்கள் பாராட்டு

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனுக்கும்  திருமணம் நடந்து சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் பும்ராவை ஊக்குவிக்கும் வகையில், சஞ்சனா கணேசன் மும்பை இந்தியன்ஸ் கலர் நீல உடை அணிந்து தோன்றியது, ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. ரசிகர்கள் அதை 'உண்மையான காதல்' (true love) என்று பாராட்டியுள்ளனர்.
கிரிக்கெட் போட்டி பரபரப்பான திருப்பங்களுடன் நடந்து கொண்டிருந்தபோது, ​​ சஞ்சனா கணேசன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலும்  ஸ்டூடியோவில் அதை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்.சி.பி.க்கு (MI vs RCB) இடையிலான ஐ.பி.எல் 2021 (IPL 2021) தொடக்க ஆட்டத்தில் விராட் கோலியின் (Virat Kohli) அணி வெற்றி பெற்றுள்ளது. ரோஹித் ஷர்மாவின் (Rohit Sharma) மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) முதல் போட்டியில் தோல்வியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
ஜஸ்ப்ரித் பும்ரா, இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர பந்துவீச்சாளர் என்ற புகழை பெற்றுள்ளார். தனது வித்யாசமான பந்துவீச்சினாலும், துல்லியமான யார்க்கர் வீசுவதினாலும்  பெயர் பெற்ற பும்ரா,  உலக கிரிக்கெட் அரங்கில் மிக சிறந்த வேகப்பந்துவீச்சாளராக விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | IPL 2021: கடைசி பந்து வரை டென்ஷன், MI வீழ்த்தி RCB முதல் வெற்றி!
 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News