ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் IPL கொண்டாட்டம் துவங்கிவிட்டது. IPL 2021 நேற்று சென்னையில் துவங்கியது, தொடரின் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையில் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தின் நடக்கவுள்ளது. IPL 2020-ல் சென்னை அணியின் தோல்வியால் பெரும் ஏமாறத்தை அடைந்த CSK ரசிகர்கள் இந்த ஆண்டு தங்கள் அணி வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.


டெல்லி கேப்பிடல்சுக்கு எதிரான தங்களது முதல் ஆட்டத்திற்காக சென்னை வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். வான்கடே மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள சென்னை வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர். வலைப் பயிற்சியில் எம்.எஸ் தோனி முழு ஃபார்மில் காணப்பட்டார். அவரது பேட்டிங் அதிரடியாக இருந்தது. 



ALSO READ: IPL 2021: கடைசி பந்து வரை டென்ஷன், MI வீழ்த்தி RCB முதல் வெற்றி!


கடந்த ஆண்டு IPL-ல் தனது கடைசி போட்டியில் ஆடிய தோனி, அது தன்னுடைய கடைசி மேட்ச் அல்ல என்பதை அப்போதே தெளிவுபடுத்தினார். அது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தது. 


கடந்த ஆண்டு, IPL வரலாற்றிலேயே முதன் முறையாக சென்னை அணி ப்ளே-ஆஃபிற்கு தகுதி பெறாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று முறை சாம்பியன்களான CSK இந்த முறை தங்கள் தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டும் அதிரடியாக களமிறங்க முழு முனைப்புடன் உள்ளது. 


IPL வரலாற்றில் மிக வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான தோனி (MS Dhoni) 204 IPL போட்டிகளில் 4632 ரன்கள் எடுத்துள்ளார். IPL 2020 அவருக்கும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை என்றாலும், அதற்கு முன்னர் அவர் செய்துள்ள சாதனைகள் சொல்லி அடங்காதவை. கடந்த ஆண்டு IPL-ல் அவர் 14 மேட்சுகளில் 116.27 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 200 ரன்களை எடுத்தார். 


ஆகஸ்ட் 2020 இல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தோனி IPL போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார். 


தனிப்பட்ட காரணங்களால் IPL 2020-ல் விளையாடாமல் போன சுரேஷ் ரெய்னா மீண்டும் அணியுடன் இணைந்திருப்பது CSK அணிக்கு மிகுந்த பலத்தை அளித்துள்ளது. 


CSK அணியின் தூணாக இருந்துள்ள சுரேஷ் ரெய்னா, 193 போட்டிகளில் 5368 ரன்களை எடுத்துள்ளார். இதில் 38 அரைசதங்களும் அடங்கும்.


இன்று மாலை டெல்லி கேப்பிடல்சுக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்சின் முதல் ஆட்டத்திற்காக அணியின் வீர்ரகளும் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை CSK-வின் முதல் போட்டி நடக்கவுள்ளது. 


ALSO READ: IPL 2021: முதல் போட்டியில் கோலிக்கு நேர்ந்த விபத்து, மனமுடைந்த ரசிகர்கள்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR