IPL கொண்டாட்டத்தின் தொடக்கம் இன்று: போட்டிகளை எங்கு எவ்வாறு live-ஆக காண்பது?

IPL 2021-ன் அனைத்து போட்டிகளையும் ஆன்லைனில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலி மற்றும் ஜியோ டிவியில் ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம். ஐபிஎல் போட்டிகளை ஆன்லைனில் கண்டு ரசிக்க, உங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் (Disney + Hotstar) சந்தா தேவைப்படும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 9, 2021, 03:32 PM IST
  • ஐபிஎல் 2021 இல் மொத்தம் 60 டி-20 போட்டிகள் விளையாடப்பட உள்ளன.
  • இந்த ஆண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை எம். ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கவுள்ளது.
  • கோவிட் -19 அச்சுறுத்தலை அடுத்து ஐபிஎல் 2021 போட்டிகளைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
IPL கொண்டாட்டத்தின் தொடக்கம் இன்று: போட்டிகளை எங்கு எவ்வாறு live-ஆக காண்பது?   title=

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் 2021 க்கான காத்திருப்பு இன்றுடன் முடிவடைகிறது. ஐபிஎல் 2021 இல் மொத்தம் 60 டி-20 போட்டிகள் விளையாடப்பட உள்ளன. ஏப்ரல் 9 தொடங்கி மே 30 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் முடிவடையும். IPL 2021 சீசனில் வெளிநாட்டு வீரர்களின் வரம்பை 4-லிருந்து 5 ஆக உயர்த்தவும் பிசிசிஐ முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை எம். ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கவுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மோதுகின்றன.

கடந்த சீசனில் (IPL 2020) ப்ளே-ஆப் சுற்றிற்கு முன்னேறிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் தோற்றது. இறுதி போட்டியில் டெல்லி அணியுடன் மோதிய மும்பை அணி கோப்பையை வென்றது. மும்பை இந்தியன்ஸ் ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது. கடந்த இரண்டு சீசனிலும் மும்பை அணி கோப்பையை கைப்பற்றி உள்ளதால், இந்த முறையும் வென்று ஹாட்ரிக் சாதனை செய்ய காத்திருக்கிறது.

ALSO READ: IPL 2021: CSK ரசிகர்களுக்கு நல்ல செய்தி, அணியில் சேருகிறார் இந்த அதிரடி ஆஸ்திரேலிய வீரர்

இந்த ஆண்டு இந்தியாவில் IPL போட்டிகள் நடைபெற்றவுள்ள நிலையில், கோவிட் -19 அச்சுறுத்தலை அடுத்து ஐபிஎல் 2021 போட்டிகளைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என IPL நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆகையால் கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு சென்று ஆட்டத்தை காண முடியாது. இருப்பினும், 2020 இல் இருந்ததைப் போலவே ரசிகர்கள் தங்கள் டிவி, கணினி மற்றும் ஸ்மார்ட்போன்களில் நேரடியாக (Live) போட்டிகளைக் காணலாம்.  

ஐபிஎல் போட்டிகளை நீங்கள் இங்கே பார்க்கலாம்: 

IPL 2021-ன் அனைத்து போட்டிகளையும் ஆன்லைனில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலி மற்றும் ஜியோ டிவியில் ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம். ஐபிஎல் போட்டிகளை ஆன்லைனில் கண்டு ரசிக்க, உங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் (Disney + Hotstar) சந்தா தேவைப்படும்.

ஐபிஎல் 2021 விளையாட்டுகள் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 எச்டி டிவி சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இதுதவிர, ரிலையன்ஸ் ஜியோ (Jio), வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட அனைத்து முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களும் IPL 2021 போட்டிகளைக் காண தங்கள் வாடிக்கையாளர்களுக்கு (Postpaid and Prepaid) ரீசார்ஜ் பேக்குகளை வழங்குகின்றன.

ALSO READ: 8 அணிகள் பங்கேற்கும் IPL கிரிக்கெட் போட்டி இன்று முதல் தொடக்கம்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News