ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய லீக் போட்டியில் மகேந்திரசிங் தோனி (MS Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி (Rajasthan Royals) முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி (Chennai Super Kings) முதலில் பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 188 ரன்கள் குவித்துள்ளது.


ALSO READ | எம்.எஸ் தோனிக்கு தடை விதிக்கப்படுமா? பதட்டத்தில் csk ரசிகர்கள்: முழு விவரம் உள்ளே


சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் அதிரடியாக விளையாடி விரைவிலயே விக்கெட்களை இழந்தனர். இதில் டூபிளெசிஸ் அடித்த 33 ரன்களே அதிகபட்சமாக இருக்கிறது. மொயின் அலி 26, ராயுடு 27, தோனி 18 ரன்கள் குவித்துள்ளனர். ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக செய்லபட்டார்கள். இதில் சேதன் சாகரியா 3 விக்கெட்கள் மற்றும் கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்கள். 


இந்நிலையில் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி ராஜஸ்தான் களமிறங்கவுள்ளது.


அணி விவரம்:


சென்னை சூப்பா் கிங்ஸ்: எம்.எஸ்.தோனி (MS Dhoni) (விக்கெட் கீபர், கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, கே.எம்.ஆசிஃப், தீபக் சாஹா், டுவைன் பிராவோ, ஃபா டூபிளெஸ்ஸிஸ், இம்ரான் தாஹிா், ஜெகதீசன், கரன் சா்மா, லுங்கி கிடி, மிட்செல் சேன்ட்னா், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷா்துல் தாக்குா், சாம் கரன், சாய் கிஷோா், மொயீன் அலி, கிருஷ்ணப்பா கௌதம், சேதேஷ்வா் புஜாரா, ஹரிசங்கா் ரெட்டி, பகத் வா்மா, ஹரி நிஷாந்த்.


ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீபர், கேப்டன்), ஜோஸ் பட்லா், பென் ஸ்டோக்ஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், மனன் வோரா, அனுஜ் ராவத், ரியான் பராக், டேவிட் மில்லா், ராகுல் தெவாதியா, மஹிபால் லோம்ரோா், ஷ்ரேயஸ் கோபால், மயங்க் மாா்கண்டே, ஜோஃப்ரா ஆா்ச்சா், ஆன்ட்ரூ டை, ஜெயதேவ் உனத்கட், காா்திக் தியாகி, ஷிவம் துபே, கிறிஸ் மோரிஸ், முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், சேத்தன் சகாரியா, கே.சி.கரியப்பா, லியாம் லிவிங்ஸ்டன், குல்திப் யாதவ், ஆகாஷ் சிங்.


நேரடி ஒளிபரப்பு:
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) இடையிலான ஐபிஎல் 2021 போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR