IPL 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 16) பஞ்சாப் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் சுலபமாக வென்று இந்த ஆண்டின் IPL பதிப்பில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி தனது 200 ஆவது IPL போட்டியை வெற்றிச்சினத்துடன் நிறைவு செய்தார்.
எனினும், IPL போட்டிகளில் குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்படும் நிலைமையிலிருந்து அவர் இன்னும் தப்பிக்கவில்லை என்பது அவரது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி கேப்பிடல்சுக்கு எதிரான CSK-வின் ஐபிஎல் 2021 இன் தொடக்க ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதற்காக CSK அணியின் கேப்டனான எம்.எஸ் தோனிக்கு (MS Dhoni) 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
எனினும், அதை ஈடு செய்யும் வகையில், பஞ்சாப் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில், CSK தங்களது ஓவர்களை 88 நிமிடங்களில் போட்டு முடித்தது. BCCI இதற்கு கொடுத்துள்ள கால அளவு 90 நிமிடங்களாகும்.
எனினும், ஒரு முறை அபராதம் விதிக்கப்பட்ட பிறகு, அடுத்த இரண்டு போட்டிகளில் CSK இதே தவறை மீண்டும் செய்தால், தோனிக்கு இரண்டு அல்லது நான்கு போட்டிகளுக்கு தடை விதிக்கப்படலாம். பி.சி.சி.ஐ மற்றும் ஐ.பி.எல் -ன் விதிகளின் படி இது சாத்தியமாகும். அதாவது, திங்களன்று (ஏப்ரல் 19) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச்சின் வேகத்தில் தோனியும் CSK அணியும் கவனமாக இருக்க வேண்டும்.
ALSO READ: CSK Captain MS Dhoni 12 லட்ச ரூபாய் அபராதம் செலுத்தும் காரணம் என்ன தெரியுமா?
IPL விளையாட்டு நிபந்தனைகள் கூறுவது என்ன:
ஒவ்வொரு இன்னிங்ஸின் முடிவிலும் ஓவர்களின் விகிதத்தை (over-rate) அதிகாரிகள் கணக்கிடுவார்கள். இருப்பினும், பிரிவு 12.7.3 இன் படி அவர்கள் பின்வரும் அம்சங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்வார்கள்:
1. ஒரு வீரர் காயப்பட்ட நிலையில், விளையாட்டுத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்களால் அந்த வீரருக்கு வழங்கப்படும் சிகிச்சையின் விளைவாக இழக்கப்படும் நேரம்.
2. கடுமையான காயத்தின் விளைவாக ஒரு வீரர் களத்தில் இருந்து வெளியேற வேண்டி இருந்தால், அதற்கு ஆன நேர அளவு.
3. மூன்றாம் நடுவர் பரிந்துரைகள், ஆலோசனைகள் மற்றும் நடுவர் அல்லது அணிகள் மூலம் கோரப்பட்ட ரெவ்யூக்கள் ஆகியவற்றுக்காக எடுக்கப்படும் நேரம்.
4. பேட்டிங் செய்யும் அணியால் செலவிடப்படும் நேரம்.
5. பந்து வீசும் அணியின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத சூழ்நிலைகளால் இழக்கப்பட்ட நேரம்.
CSK கேப்டனாக தோனியின் மைல்கல் போட்டி
சஞ்சு சாம்சனின் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டி CSK அணியின் கேப்டனாக தோனியின் 200 வது போட்டியாக இருக்கும். IPL மற்றும் சாம்பியன்ஸ் லீக் என அவர் இந்த போட்டிகளில் CSK அணியை தலைமை ஏற்று நடத்தியிருந்தாலும், 199 போட்டிகளில் மட்டுமே அவர் கேப்டனாக இருந்துள்ளார் என்பதும் சாம்பியன்ஸ் லீக்கில் ஒரு போட்டியில் சுரேஷ் ரெய்னா கேப்டனாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓவர் ரேட் குறித்த IPL விதிகளை தோனி சரியாக கடைபிடிக்க முடியாமல் போனால், அது அவருக்கும், அணிக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் வருத்தத்தை உண்டு பண்ணலாம். டெல்லி கேப்பிடல்சுக்கு எதிரான போட்டியில் தோனி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அவர் ஆட வரவில்லை. இந்த நிலையில், அவரது ஆட்டத்தைக் காண இன்னும் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR