IPL 2021 மீண்டும் எங்கு, எப்போது நடைபெற வாய்ப்பு இருக்கிறது? சாத்தியக்கூறுகள் இவை
ஐபிஎல் 2021இன் மீதமுள்ள போட்டிகள் எங்கு எப்போது நடத்தப்படும் என்பது பல விளையாட்டு ரசிகர்களின் முதன்மையான கேள்வியாக இருக்கிறது. இது தொடர்பாக பிசிசிஐ (BCCI) முன் இருக்கும் வாய்ப்புகளும், நிதர்சனமும் என்ன? தெரிந்துக் கொள்வோம்.
IPL 2021: ஐபிஎல் 2021இன் மீதமுள்ள போட்டிகள் எங்கு எப்போது நடத்தப்படும் என்பது பல விளையாட்டு ரசிகர்களின் முதன்மையான கேள்வியாக இருக்கிறது. இது தொடர்பாக பிசிசிஐ (BCCI) முன் இருக்கும் வாய்ப்புகளும், நிதர்சனமும் என்ன? தெரிந்துக் கொள்வோம்.
கோவிட் -19 பரவலின் தாக்கம் மற்றும் ஐ.பி.எல்லின் பல்வேறு அணியின் பல வீரர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதை அடுத்து பி.சி.சி.ஐ. ஐ.பி.எல் 2021 போட்டித்தொடரை தற்காலிகமாக நிறுத்துவதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லாமல் போனது.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து கூறிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ஐ.பி.எல் போட்டிகள் ரத்துசெய்யப்பட்டால், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு 2500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிட்டிருந்தார்.
Also Read | World Test Championship இந்திய அணி அறிவிப்பு, ஜடேஜா உள்ளே
இந்த ஆண்டு ஐ.பி.எல் லீக்கில் இன்னும் 31 போட்டிகள் எஞ்சியிருக்கின்றன. அதோடு, சர்வதேச போட்டிகளுக்கான அட்டவணை ஏற்கனவே முடிவு செய்திருருப்பதால், ஐபிஎல்லின் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு பி.சி.சி.ஐ.யிடம் உள்ள தெரிவுகள் என்ன என்று பார்க்க வேண்டும். அக்டோபரில் நடைபெறவுள்ள டி 20 உலகக் கோப்பைக்கு முன்னதாக எஞ்சிய போட்டிகள் நடைபெறலாம். அது முடியாவிட்டால் டி 20 உலகக் கோப்பைப் போட்டிக்கு பின்னர் நடைபெறலாம்.
டி 20 உலகக் கோப்பை அக்டோபர் நடுப்பகுதியில் தொடங்குகிறது. உலகக் கோப்பைக்கு சற்று முன்னதாக பி.சி.சி.ஐ லீக் போட்டிகளை நடத்த திட்டமிடலாம். பெரும்பாலான அணிகள் உலகக் கோப்பைக்கு சற்று முன்னதாகவே பயிற்சிகளை ஆரம்பிப்பார்கள் என்பதால் ஐ.பி.எல்லின் பெரும்பாலான வீரர்கள் போட்டிகளில் விளையாட தயாராக இருப்பார்கள்.
Also Read | Venkaboys: ராகுல் டிராவிட்டின் கோப அவதாரம், காரணம் இதுதான்…
எங்கே நடைபெறும்?
இந்தியாவில் கோவிட் -19 நிலைமையைப் பொறுத்து, எஞ்சிய போட்டிகள் இந்தியாவிலோ அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இங்கிலாந்திலோ விளையாடப்படலாம். இதேபோன்ற சூழ்நிலைகளில் கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நடத்து முடித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) போட்டிகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இருப்பினும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பெரும்பாலான இந்திய வீரர்கள் இருப்பார்கள் என்பதன் அடிப்படையில் இங்கிலாந்தில் எஞ்சிய ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.
Also Read | COVID-19 நிவாரணப் பணிகளுக்காக 2 கோடி கொடுத்த விராட் – அனுஷ்கா தம்பதி
நவம்பர் முதல் வாரத்தில் உலகக் கோப்பை முடிவடைந்த பிறகு பி.சி.சி.ஐ.யின் மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறலாம்.
யுஏஇ (UAE) மீண்டும் போட்டியை நடத்துவதற்கு உகந்த இடமாக இருக்கும். ஆனால் நவம்பர் நடுப்பகுதியில் டி 10 லீக் (T10 league) தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதால், அபுதாபியில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்த முடியாது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து, நிலைமை மேம்பட்டு கோவிட் -19 பாதிப்புகள் கணிசமாகக் குறைந்துவிட்டால் பி.சி.சி.ஐயின் முதல் தெரிவு இந்தியாவாகவும் இருக்கும்.
Also Read | கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் - EPS and OPS தரப்பு மோதல்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR