இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 இன் 42 வது போட்டியில் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கவுள்ளது. இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் (Sheikh Zayed Stadium) நடைபெறும். இந்த போட்டியில் இந்திய அணியின் இரண்டு தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் கேப்டனாக நேருக்கு நேர் மோதுவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் 10-10 போட்டிகளில் விளையாடி 4-4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் தலா 8 புள்ளிகள் கிடைத்துள்ளது. ஆனால் புள்ளிகள் அட்டவணையில் (IPL 2021 Points Table) ரன்-ரேட் அதிகமாக இருப்பதால், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 5வது இடத்திலும், ரோஹித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் 7 வது இடத்திலும் உள்ளன.


இந்த சீசனின் இரண்டாம் கட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்த மும்பை அணிக்கு இப்போது வெற்றி தேவை. கடந்த மூன்று போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளில் ரோஹித் அணி தோல்வியடைந்தது.


ALSO READ | தோனிக்கு 40 வயதாகிவிட்டது, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார்: ஹாக் அதிரடி


பஞ்சாப் பற்றி பேசுகையில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்த பிறகு, அந்த அணி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக ஒரு அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தது. 


இன்றைய இரு அணிகளில் களம் இறங்கும் 11 பேரை பற்றி பேசினால்,  எந்த மாற்றமும் இருக்காது எனத் தெரிகிறது. ஏனென்றால், பஞ்சாப் கடைசி போட்டியில் வெற்றி பெற்றதால், அதே அணியை இறக்கக்கூடும். அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியின் அனைத்து வீரர்களும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நன்றாக அடி வருகின்றனர். ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டாலும், அவர் ஆர்சிபிக்கு எதிராக போட்டியில் அணிக்கு திரும்பினார்.


இரு அணிகளிலும் இந்த 11 பேர் விளையாட வாய்ப்புள்ளது:


மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians): ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, ராகுல் சாஹர், ஆடம் மில்னே, ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.


பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings): கேஎல் ராகுல் (சி/டபிள்யூ), மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், ஏடன் மார்கரம், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஹர்பிரீத் பிரார், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, நாதன் எல்லிஸ், அர்ஷ்தீப் சிங்.


ALSO READ | IPL 2021: CSKvsKKR போட்டியில் பீகார் நபருக்கு அடித்தது ஜாக்பாட், ரூ. 1 கோடி பரிசு


ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி குறித்து கேள்வி?
ஐபிஎல் 2021 இன் முதல் இரண்டு போட்டிகளில் அணியிலிருந்து வெளியேறிய பிறகு ஹர்திக் பாண்டியாவின் (Hardik Pandya) உடற்தகுதி குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆர்சிபிக்கு எதிரான இரண்டாவது போட்டியின் மூன்றாவது போட்டியில் அவர் திரும்பினார் என்றாலும், அவர் பந்துவீசவில்லை. அவரது முழு உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுப்பட்டு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR