IPL 2021: கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த  14- வது ஐபிஎல் (Indian Premier League- IPL) T20 தொடர் சென்னையில் தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில் இன்றைய 9வது லீக் போட்டியில்,  மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians ), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு (Sunrisers Hyderabad ) இடையேயான போட்டி சென்னை (Chennai) சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 


முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. 


அடுத்து விளையாடிய ஹைதராபாத் அணி, 137 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


இதை அடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில், மும்பை இந்தியன் அணி வெற்றி பெற்றது.இது மும்பை அணியின் இரண்டாவது வெற்றியாகும்.


ALSO READ | IPL 2021: தோனி ஒரு சரியான கேப்டன் இல்லை: கவுதம் கம்பீரின் shocking கருத்துக்கு காரணம் என்ன?


IPL 2021 14-வது IPL கிரிக்கெட் தொடரில், நேற்றைய லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியும், லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியும் மோதின. நேற்றைய 8வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) முதல் வெற்றியை பதிவு செய்தது.


ஐபி எல் போட்டித் தொடரில் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான்  என 8 அணிகள் பங்கேற்கின்றனர். சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத்,  ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறும்.


ALSO READ | IPL 2021, CSK vs PBKS: முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR