IPL 2021: IPL வரலாற்றில் மிகவும் வலிமையான அணிகளில் ஒன்றாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்ற ஆண்டு நடந்த IPL ஒரு திருஷ்டியைப் போல ஆனது. யாரும் எதிர்பாராத வகையில் மிக மோசமான வகையில் CSK அணி பின்னடைவைக் கண்டது. ஆனால் இந்த அணி தோல்வியைக் கண்டு துவண்டுவிடும் அணி அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இன்னும் கடுமையான போட்டியை தரக்கூடிய ஒரு அணியாகத்தான் இதை பிற அணிகள் காண்கிறார்கள். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, CSK அணியின் திறனைப் பற்றிய தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

CSK அணியில் ஓய்வுபெற்ற பல நட்சத்திர வீரர்கள் உள்ளனர். எம்.எஸ். தோனி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, ஃபாஃப் டு பிளெசிஸ், இம்ரான் தாஹிர் போன்ற வீரர்கள் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளயாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


IPL 2020-ல் ரசிகர்களுக்கு நம்பமுடியாத ஏமாற்றத்தை அளித்த தோனி, இந்த முறை தனது பேட்டிங் மூலம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என கடுமையாக முயற்சித்து வருகிறார். அணியின் வெற்றிக்கு தல தோனியின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்றாலும்,  சின்ன தல சுரேஷ் ரெய்னாவின் பங்கையும் எந்த அளவிலும் குறைத்து மதிப்பிட முடியாது என ஆகாஷ் சோப்ரா கூறுகிறார். இந்த ஆண்டு IPL-ல் CSK-வின் நிலை எப்படி இருக்கும் என்பதை சுரேஷ் ரெய்னாவின் ஆட்டம் தீர்மானிக்கும் என்கிறார் ஆகாஷ் சோப்ரா. 


ALSO READ: IPL 2021: மும்பை வாங்க்டே ஸ்டேடியத்தில் எட்டு பேருக்கு COVID-19 பாதிப்பு


“சுரேஷ் ரெய்னா (Suresh Raina), அம்பத்தி ராயுடு மற்றும் எம்.எஸ். தோனி போன்றவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது விளையாடவில்லை. ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக சிறிது நேரம் எந்த போட்டியிலும் இடம் பெறாமல் இருந்தார். எனவே, ஏழு சிறந்த வீரர்களில் நான்கு பேருக்கு தேவையான ஃபிட்னசோ அல்லது போதுமான போட்டிகளில் விளையாடிய அனுபவமோ கிடைத்திருக்க வாய்ப்பில்லை” என்று சோப்ரா தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவில் கூறியுள்ளார்.


”டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் அதிகம் ஆடிய ராபின் ஊத்தப்பா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு அணியில் அதிக வாய்ப்புகள் அளிக்கப்படலாம். ஃபாஃப் டு பிளெசிஸும் நன்றாக விளையாடுகிறார். ஆனால் மீதமுள்ள நான்கு வீரர்கள் பற்றிதான் கவலை உள்ளது. அது ஒரு சவாலாக இருக்கும். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துக்கும் அதிக ஃபிட்னெஸ் தெவைப்படும்” என்று அவர் கூறினார்.


தோனி, கேதார் ஜாதவ் உள்ளிட்ட பல மூத்த பேட்ஸ்மேன்கள் சென்ற சீசனில் நல்ல முறையில் விளையாடாத நிலையில், தன் திறமையைக் காட்டிய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை அணி பேட்டிங்கில் முன்னிலைப்படுத்த வேண்டும் என சோப்ரா விரும்புகிறார். இருப்பினும், சுரேஷ் ரெய்னாதான் CSK அணியின் துருப்புச் சீட்டு என்பதில் தெளிவாக இருக்கிறார் ஆகாஷ் சோப்ரா. 


"CSK ரவீந்திர ஜடேஜாவை பேட்டிங்கில் முன்னிலைப்படுத்தி அவருக்கு ஆட அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என நான் நம்புகிறேன். எம்.எஸ் தோனி கண்டிப்பாக நல்ல விளையாட்டை வெளிப்படுத்துவார். ஆனால், சுரேஷ் ரெய்னாதான் முக்கிய துருப்புச் சீட்டு. அவர் நன்றாக ஆடத் தொடங்கிவிட்டால், CSK அணிக்கு கவலை இல்லை. இல்லையெனில், இந்த ஆண்டும் CSK-க்கு சவால் மிகுந்த ஆண்டாக இருக்கும் என்பது எனது கணிப்பு” என்கிறார் சோப்ரா.


IPL 2021-ல் CSK-வின் தலையெழுத்தை தீர்மானிக்கப்போவது தல தோனியின் ஃபார்ம்தான் என பலர் நினைத்தாலும், சின்ன தல சீறிப்பாய்ந்தால், CSK-வின் ஓட்டத்தை யாராலும் நிறுத்த முடியாது என நினைக்கிறார்கள் நிபுணர்கள்.


ALSO READ: உலகக் கோப்பை 2011 வெற்றியின் பத்து ஆண்டுகள் நிறைவு: எண்ணிப் பார்த்து மகிழும் Yuvraj Singh


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR