இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரரான கவுதம் கம்பீர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி பற்றி சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கேப்டன் எம்.எஸ்.தோனி ஒரு சரியான கேப்டனாக இருக்கும் பட்சத்தில், அவர் 7-வதாக பேட் செய்வது சரியான ஒரு முடிவல்ல என கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். தனது அணி அதிகப்படியான ரன்களை எடுக்க வேண்டுமானால், தோனி இன்னும் முன்னரே பேட்டிங் செய்ய வர வேண்டும் என கம்பீர் கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2021 துவங்கி சில போட்டிகள் நடந்துள்ள நிலையில், சென்னை அணி தனது முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில், சென்னை டெல்லி அணியிடம் தோற்றுப்போனது. 7 வதாக பேட்டிங் செய்ய வந்த தோனி, ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். முன்னர், ஆட வந்து முதல் பந்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை தோனி வெளிப்படுத்தும் அபார வீரராக இருந்தார். இப்போது அவர் அப்படி இல்லை. அவரால் முன்னர் இருந்ததைப் போல இப்போது அனைத்து பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்ப முடியாது. ஆகையால் அவர் இன்னும் விரைவாக ஆட வந்து தன்னை நிலைப்படுத்திக்கொண்டு தன் இயல்பான ஆட்டத்தை துவக்க வேண்டும். அதற்கு அவருக்கு விளையாட அதிக ஓவர்கள் கிடைக்க வேண்டும் என கவுதம் கம்பீர் (Gautam Gambhir) தெரிவித்தார். 


"எம்.எஸ். தோனி பேட்டிங் ஆர்டரில் இன்னும் முன்னரே விளையாட வர வேண்டும். அதுதான் முக்கியம். அவர் முன்னிருந்து அணியை வழி நடத்த வேண்டும்.” என கவுதம் கம்பீர் தெரிவித்தார். கவுதம் கம்பீர் IPL துவங்கிய போது கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ: RR vs DC IPL 2021: டெல்லி கேபிடல்ஸை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் அணி


"ஒரு கேப்டனாக இருப்பவர் அணியை முன்னிருந்து வழி நடத்த வேண்டும். 7-ஆவதாக ஆட வந்தால், உங்களால் அணியை வழி நடத்த முடியாது” என்று அவர் தன் கருத்தை தெரிவித்தார். 


CSK-வின் பந்துவீச்சில் எந்த சிக்கல்களும் இருப்பதாக தனக்குத் தெரியவில்லை என கூறிய கவுதம் கம்பீர், தோனி பேட்டிங் ஆர்டரில் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் பேட் செய்ய வருவது அணிக்கு நன்மை பயக்கும் என்றும் தெரிவித்தார். 


“அவர்களது பந்துவீச்சில் சில சிறிய சிக்கல்கள் உள்ளன. ஆனால் அவை எளிதாக தீர்க்கப்படக்கூடியவை. எம்.எஸ். தோனி, நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எம்.எஸ் தோனி (MS Dhoni) அல்ல என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அப்போது அவர் ஆட வந்த முதல் பந்திலிருந்தே தனது அதிரடி ஆட்டத்தைக் காட்டத் தொடங்குவார். அவர் நான்காவது அல்லது ஐந்தாவதாக வந்து ஆட வேண்டும். அதற்கு கீழ் போகக்கூடாது என்பது எனது கருத்து” என்றார் கம்பீர். 


இன்று IPL 2021-ன் தனது இரண்டாவது ஆட்டத்தை CSK அணி ஆடவுள்ளது. இன்றைய போட்டியில் சிஎஸ்கே பஞ்சாப் கிங்ஸை அணியை எதிர்கொள்கிறது.


ALSO READ: ODI Cricketer of decade:விராட் கோலிக்கு மிகப் பெரிய விருது, சச்சின், கபில் தேவுக்கும் கௌரவம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR