இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL 2021) 14 வது சீசனின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா சனிக்கிழமை (மே 29) ஏ.என்.ஐ.-யிடம் தெரிவித்தார். இது தொடர்பாக சனிக்கிழமை (மே 29) இணைய வழியில் நடந்த சிறப்பு பொது சந்திப்பில் அனைத்து உறுப்பினர்களும் இந்த ஆலோசனைக்கு ஒரு மனதாக ஒப்புக்கொண்டதன் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல அணிகளின் வீரர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் COVID-19 தொற்றுநோய் உறுதி ஆன பின்னர் மே மாத தொடக்கத்தில் நிறுத்தப்பட்ட IPL 2021 டி 20 லீக், இப்போது செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடக்கும். இந்த காலத்தில் இந்தியாவில் மழைக்காலம் என்பதால் இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. 


"இந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் பருவமழை காலம் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (UAE) இந்தியன் பிரீமியர் லீக் 2021 சீசனின் மீதமுள்ள போட்டிகளை மாற்றுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சனிக்கிழமை அறிவித்தது." என்று பிசிசிஐ சனிக்கிழமை ஒரு அறிக்கையில் கூறியது.


"இது தொடர்பாக சனிக்கிழமை (மே 29) இணைய வழையில் நடந்த சிறப்பு பொது சந்திப்பில் அனைத்து உறுப்பினர்களும் இந்த ஆலோசனைக்கு ஒரு மனதாக ஒப்புக்கொண்டனர்" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செப்டம்பர்-அக்டோபர் சாளரத்தை மனதில் கொண்டு வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்களுடன் வெளிநாட்டு வீரர்களால் அந்த நேரத்தில் போட்டிகளில் ஆட முடியுமா என்பது குறித்து BCCI விவாதிக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு வீரர்களால் ஒருவேளை மாற்றப்பட்ட தேதிகளில் ஆட முடியாமல் போனால், அது ஒப்பந்தத்தை முறியடித்ததாக இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. ஜூன் 1 ம் தேதி சர்வதேச கிரிக்கெட் அமைப்பான ICC உறுப்பினர்கள் கூடும் போது, டி-20 உலகக் கோப்பைக்கான நேரத்தை BCCI கோரும் என தெரியவந்துள்ளது. 


ALSO READ: கப்பு முக்கியம் கோலி, ஆக்ரோஷம் அல்ல ஆதிக்கம் தேவை: கோலிக்கு கபில் தேவின் WTC அறிவுறை


IPL 2021-ன் மீதமுள்ள போட்டிகளை BCCI ஐக்கிய அமீரகத்தில் நடத்தும் என்றும், இவை 25 நாட்களுக்கான இடைவெளியில் நடத்தப்படும் எனவும் BCCI வட்டாரம் ஒன்று ஏ.என்.ஐ-யிடம் தெரிவித்துள்ளது. 


"எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்துடன் (ஈசிபி) பேச்சுவார்த்தை நடந்துள்ளது. மீதமுள்ள IPL போட்டிகளை கடந்த முறை போலவே துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபியில் நடத்துவதில் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். பிசிசிஐ இப்போது வெளிநாட்டு வாரியங்களுடன் பேசும். ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடும் நிலையில் உள்ள போதிலும், ​​இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து வீரர்கள் விளையாடுவது குறித்து சில கேள்விகள் உள்ளன. 25 நாட்களுக்கான இடைவெளியில் போட்டிகளை நடத்த முடிவெடுத்துள்ளோம்." என்று BCCI வட்டாரம் தெரிவித்துள்ளது. 


டி 20 உலகக் கோப்பைக்கு இன்னும் நான்கு மாதங்கள் உள்ள நிலையில், இந்த போட்டிகளை நடத்துவது பற்றி முடிவெடுக்க, ஜூன் இறுதி அல்லது ஜூலை மாத துவக்கம் வரை நேரம் அளிக்குமாறு ICC-யிடம் BCCI கேட்கும். இது குறித்து ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


அரசாங்கத்திடமிருந்து வரி விலக்கைப் பொறுத்தவரை, வாரியம் நேர்மறையான பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை கொண்டுள்ளது. "நாங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதில் முக்கியமான சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன" என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.


ALSO READ:மெகா அப்டேட்! செப்டம்பரில் ஐபிஎல் போட்டிகள், பிசிசிஐ தகவல் லீக்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR