கப்பு முக்கியம் கோலி, ஆக்ரோஷம் அல்ல ஆதிக்கம் தேவை: கோலிக்கு கபில் தேவின் WTC அறிவுறை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பே, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கணிப்புகளைத் தொடங்கி விட்டனர். இதற்கிடையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பு தற்போதைய கேப்டன் விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சிறப்பு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Written by - ZEE Bureau | Last Updated : May 28, 2021, 05:17 PM IST
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் இங்கிலாந்தில் மோத உள்ளன.
  • இந்திய அணி ஜூன் 2 ஆம் தேதி இங்கிலாந்துக்கு புறப்படவுள்ளது.
  • கபில் தேவ் விராட் கோலிக்கு வித்தியாசமான அறிவுறையை வழங்கியுள்ளார்.
கப்பு முக்கியம் கோலி, ஆக்ரோஷம் அல்ல ஆதிக்கம் தேவை: கோலிக்கு கபில் தேவின் WTC அறிவுறை

புதுடெல்லி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் இங்கிலாந்தில் மோத உள்ளன. இந்த போட்டிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன. இந்தியாவுக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான மோதல்கள் ஜூன் 18 அன்று சவுத்தாம்ப்டனில் தொடங்கும். இந்திய அணி ஜூன் 2 ஆம் தேதி இங்கிலாந்துக்கு புறப்படவுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பே, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கணிப்புகளைத் தொடங்கி விட்டனர். இதற்கிடையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பு தற்போதைய கேப்டன் விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சிறப்பு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கபில் தேவ் விராட்டுக்கு வழங்கிய அறிவுறை என்ன? 
கபில் தேவ் (Kapil Dev) ஒரு பத்திரிகைக்கு அளித்த போட்டியில், "விராட் கோலியால் தற்போது அடிக்கடி சதமடிக்க முடியவில்லை என்றாலும், அவர் நன்றாக ரன்களை அடித்து வருகிறார். இங்கிலாந்திலும் அவர் இப்படியே அதிரடியாக ஆடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், இந்த அதிரடி ஆட்டம் எல்லை மீறாமல் அவர் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுகிறார், அது அவரது சுபாவம். ஆனால், அவர் அதிக ஆக்கிரமிப்புப் பாணியை பின்பற்றக்கூடாது என்பதுதான் என் கவலை. அவர் போட்டியின் ஒவ்வொரு செஷனிலும் தன் ஆக்கிரமிப்பு போக்கை சரிபார்த்து அதற்கேற்ப மாற்றியமைக்க வேண்டும். அதிக ஆக்ரோஷத்தைக் காண்பிப்பதை விட எதிரணி மீது அதிக ஆதிக்கம் செலுத்துவதில் அவர் கவனம் செலுத்துவது நல்லது" என்று கூறியுள்ளார். 

ALSO READ: அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சால் அச்சம்: உலகக் கோப்பைக்கு முன் New Zealand வீரரின் வெளிப்பாடு

அவர் மேலும் கூறுகையில், "விராட் கோலி (Virat Kohli) நன்றாக ஆடி அதிக ரன்களை எடுக்க வேண்டும், ஆனால் அவர் அதிக ஆக்ரோஷத்தை காட்டக்கூடாது என நான் எச்சரிக்கிறேன். இங்கிலாந்தில் உள்ள மைதானங்களில் தேவை இல்லாமல் அதிகமாகச் செய்வதும் நடக்காது, நாம் எண்ணுவது விரைவாகவும் நடக்காது. அங்கு நீங்கள் பந்தின் இயக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் சீம் மற்றும் ஸ்விங் பந்துகளை நன்றாக அடிப்பவராக இருந்தால், சற்று நிதானத்துடன் ஆடினால், உங்களுக்கு இங்கிலாந்தில் வெற்றி கிடைத்துவிடும்" என்றார். 

ஜூன் 18 முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி தொடங்கும்
நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship) இறுதிப் போட்டி ஜூன் 18 அன்று சவுத்தாம்ப்டனில் நடைபெறும். இங்கிலாந்துக்கு எதிரான தொடர் ஆகஸ்ட் 4 முதல் நாட்டிங்ஹாமில் தொடங்கும். இரண்டாவது டெஸ்ட் ஆகஸ்ட் 12 முதல் 16 வரை லாட்ஜெர்களிலும், மூன்றாவது ஆகஸ்ட் 25 முதல் 29 வரை லீட்ஸிலும், நான்காவது செப்டம்பர் 2 முதல் 6 வரை ஓவலிலும், ஐந்தாவது செப்டம்பர் 10 முதல் 14 வரை மான்செஸ்டரிலும் நடைபெறும்.

இங்கிலாந்து செல்லும் இந்திய அணி:

விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா, சுப்மான் கில், மயாங்க் அகர்வால், சேதேஸ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரீத் பும்ரா, இஷாந்த் ஷர்மா, மொஹம்மத் ஷமி, மொஹம்மத் சிராஜ், ஷர்துல் டாகுர், உமேஷ் யாதவ், கே.எல். ராகுல் (ஃபிட்டாக இருந்தால்), விருத்திமான் சாஹா (ஃபிட்டாக இருந்தால்) 

காத்திருப்பு வீர்ரகள்: அபிமன்யு ஈஸ்வரன், பிரசித்த கிருஷ்ணா, ஆவேஷ் கான், அர்ஜன் நக்வாஸ்வாலா.

ALSO READ: Ind vs NZ WTC Final: இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் சவால் நிறைந்தது! கேன் வில்லியம்சன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News