யுஸ்வேந்திர சாஹல் கடந்த சில நாட்களாக லைம்லைட்டில் சிக்கியுள்ளார். அஸ்வினுடனான பேட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் தன்னை தலைகீழாக தள்ளப்பார்த்தார் என அவர் தெரிவித்த குற்றச்சாட்டு, கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அடங்குவதற்குள் சாஹலைப் பற்றியான இன்னொரு வீடியோ வெளியாகியுள்ளது. இந்திய வீரரான ஹர்ஷல் படேலுடன் மேட்ச் முடிந்த பிறகு சாஹல் வேண்டுமென்றே தவிர்த்த வீடியோ வைரலாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | சென்னையை விட்டுக்கொடுக்காத மும்பை! தொடர்ந்து 4வது போட்டியிலும் தோல்வி!


பெங்களுரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. இப்போட்டியில் பெங்களுரு அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 169 ரன்கள் எடுக்க, பெங்களுரு அணி 19.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. 



போட்டி முடிந்த பிறகு களத்தில் இருந்த ஹர்ஷல் படேல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் ராஜஸ்தான் அணி வீரர்களுடன் கைக்குலுக்கி கொண்டனர். அப்போது, சாஹல் வரிசையாக வீரர்களுக்கு கைக்கொடுக்கிறார். அருகே இருக்கும் ஹர்ஷல் படேல் அப்படியே நின்று கொண்டிருக்க, அவரை மட்டும் தவிர்த்துவிட்டு பார்க்காமல் செல்வதுபோல் சாஹல் சென்றுவிடுகிறார்.  இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. அவர்களுக்கு இடையே ஏதேனும் புகைச்சல் இருப்பதாக நெட்டிசன்கள் முனுமுனுத்து வருகின்றனர்.



இருவரும் பெங்களூரு அணிக்காக விளையாடினர். சாஹலை அணியில் இருந்து விடுவித்த பெங்களூரு அணி, அவரை ஏலம் எடுக்கவும் ஆர்வம் காட்டவில்லை. இதனையடுத்து 6.5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி சாஹலை ஏலம் எடுத்தது. 


மேலும் படிக்க | மீண்டும் சொதப்பிய சிஎஸ்கே! பிளே ஆப் வாய்ப்பு பறிபோனதா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR