குல்தீப் சுழலில் குழியில் விழுந்த கொல்கத்தா! டெல்லி அபார வெற்றி!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் 2022-ன் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. கடந்த ஆண்டு டெல்லி அணியில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர், இந்த வருடம் கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் விறுவிறுப்பு அதிகமாக இருந்தது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
மேலும் படிக்க | சென்னை அணியின் தோல்விக்கான 4 காரணங்கள் இவை தான்
ஆரம்பத்திலிருந்தே அதிரடி காட்டிய டெல்லி அணி சிறப்பாக விளையாடியது. பிரித்வி ஷா மற்றும் வார்னர் கொல்கத்தா அணியின் பவுலர்களை துவம்சம் செய்தனர். பவர் பிளேயில் அதிரடி காட்டியவர்கள் 90 ரன்களுக்கு மேல் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பை கொண்டு சென்றனர். ஷா 51 ரன்களும், வார்னர் 61 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். கேப்டன் பந்த் அதிரடியாக விளையாடி 27 ரன்கள் எடுத்தார். கடைசி 2 ஓவர்களில் சரவெடி காட்டிய அக்சர் மற்றும் தாகூர் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை நாலாபுறமும் பறக்க விட்டனர். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்தது. இந்த சீசனில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.
கடினமான இலக்கை எதிர்த்து ஆடிய கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தனர். ரஹானே 8 ரன்களிலும், வெங்கடேச ஐயர் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தார். பின்பு ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ராணா பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். இருப்பினும் அவர்களது நிதான ஆட்டம் நீண்ட நேரம் எடுபடவில்லை. ஐயர் 54 ரன்களுக்கும், ராணா 30 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கொல்கத்தா அணி 19.4 ஓவரிலேயே 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பலமான பேட்டிங் line-up கொண்ட கொல்கத்தா அணியை குல்தீப் தனது சுழலில் காலி செய்தார். சிறப்பாக பந்துவீசி குல்தீப் யாதவ் 4 ஓவரில் 35 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், மறுபுறம் கலீல் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் இந்த போட்டியில் டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR