IPL2022: லக்னோ அணியில் இருந்து விலகும் வேகப்பந்து வீச்சாளர்! ஏன்?
ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே இருக்கும்நிலையில் லக்னோ அணியில் இருந்து முக்கிய வேகப்பந்துவீச்சாளர் விலக உள்ளார்.
ஐபிஎல் 2022 தொடர் தொடங்குவதற்கு இன்னும் 3 வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், முக்கிய வீரர்கள் காயமடைந்து வருவது அணி நிர்வாகங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்துள்ள தீபக் சாஹர் காயத்தில் அவதிப்பட்டு வருவதால், அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது குறித்த சந்தேகம் எழுந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளரும் காயத்தில் சிக்கியுள்ளார்.
மேலும் படிக்க | "ஐபிஎல் திருவிழா 2022" - புதிய மாற்றமும் புதிய வியூகமும்..!
இங்கிலாந்து வீரர் மார்க் வுட்டை 7.5 கோடிக்கு கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. இப்போது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணியில் விளையாடி வரும் அவருக்கு வலது முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் பந்துவீசவில்லை. மருத்துவ பரிசோதனையில் மார்க் வுட்டின் காயம், அண்மையில் ஜோப்ரா ஆர்ச்சருக்கு ஏற்பட்ட காயத்தை போன்றது என தெரியவந்துள்ளது. இந்தக் காயத்தால் ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த ஓராண்டாக கிரிக்கெட் விளையாடாமல் ஓய்வெடுத்து வருகிறார்.
மேலும் படிக்க | IPL Auction2022: இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 5 பேர்
இப்போது அதேபோன்ற காயத்தில் மார்க்வுட் சிக்கியிருப்பது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், காயத்தின் தன்மை அந்தளவுக்கு வீரியமானது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. பிரம்மாண்ட தொடக்க விழாவுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் முதல் போட்டியில் நேருக்கு நேர் மோத உள்ளன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR