இன்று நடைபெற்ற ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் அணிகள் விளையாடின.  தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வி பெற்றிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி இந்த போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்று விளையாடியது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IPL 2022 மைதானத்தில் ரசிகர்களை ஏமாற்றிய ரோஹித் சர்மா!


வெந்த புண்ணில் வேல்-ஐ பாய்ச்சுவது போல மும்பை அணியின் பவுலிங்கை ஆரம்பம் முதலே லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் சிதறடித்தனர்.  கடந்த வருடம் மும்பை அணியில் விளையாடிய டி காக், பாண்டியா போன்ற வீரர்கள் தற்போது லக்னோ அணிக்காக விளையாடி வருகின்றனர்.  மனிஷ் பாண்டே 38 ரன்களும், டி காக் 24 ரன்களும் அடிக்க, மறுபுறம் கேப்டன் ராகுல் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.  இன்று தனது 100வது போட்டியில் விளையாடிய கேஎல் ராகுல் சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.  60 பந்துகளில் 5 சிக்சர்கள் 9 பவுண்டரிகள் உட்பட 103 ரன்கள் குவித்தார். 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்கள் குவித்தது.


 



கடினமான இலக்கை எதிர்த்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் சரிந்தது.  இஷான் கிசன் 13 ரன்கள், ரோகித் சர்மா 6 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர்.  சிறிது நேரம் தாக்கு பிடித்த சூர்யகுமார் யாதவ் 37 ரன்களுக்கும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொல்லார்ட் 25 ரன்களில் ஆட்டமிழந்தனர்.  20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது.  லக்னோ அணி இந்த போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.



மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் பற்றி சச்சின் தெண்டுல்கர் மகள் கூறியது இதுதான்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR