வரலாற்றை மாற்றாத மும்பை! முதல் போட்டியில் தோல்வி!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்துள்ளது.
ஐபில் 2022-ன் இரண்டாவது போட்டி இன்று மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. மதியம் 03:30 க்கு தொடங்கிய இந்தப் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற ரிஷப் பண்ட் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். மும்பை அணியின் ஓப்பனிங் மிகவும் சிறப்பாக அமைந்தது கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் டெல்லி அணியின் பவுலர்களை நாலாபுறமும் பறக்க விட்டனர்.
மேலும் படிக்க | முதல் போட்டியில் தோற்றால் சென்னை சாம்பியன் ஆகாதா?!- உண்மை என்ன?
32 பந்துகளில் 41 எடுத்த ரோஹித் சர்மா குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த அன்மோல்பிரீத் சிங் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பிறகு வந்த திலக் வர்மா 22 ரன்களுக்கு வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொலார்ட் 3 ரன்களுக்கு வெளியேறினார். மும்பை அணிக்கு ஒருபுறம் விக்கெட் விழுந்து கொண்டிருக்க மறுபுறம் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். 48 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்சர் உட்பட 81 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது.
சிறிது கடின இலக்கை எதிர்த்து ஆடிய டெல்லி அணிக்கு ஓபனிங் சிறப்பாக அமைந்தது. பிருத்வி ஷா அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார். டிம் சீஃபர்ட் 14 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மன்தீப் சிங் மற்றும் பந்த் அடுத்தது சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 30 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து டெல்லி அணி 72 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் போட்டி மும்பை அணியின் பக்கம் சாய்ந்தது.
பிறகு ஜோடி சேர்ந்த லலித் யாதவ் மற்றும் தாக்கூர் போட்டியின் முடிவை மாற்றினார். 11 பந்துகளில் 4 பவுண்டரிகள் உட்பட 21 ரன்கள் அடித்து தாக்கூர் வெளியேறினார். அதன்பிறகு இறங்கிய அக்சர் பட்டேல் போட்டியை தன் பக்கம் திருப்பினார். வெறும் 17 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 38 ரன்கள் குவித்தார். மறுபுறம் 38 பந்தில் 48 ரன்களை குவித்தார் லலித் யாதவ். இவர்களின் அதிரடி ஆட்டத்தினால் டெல்லி அணி 18.2 ஓவரில் 179 ரன்களை குவித்து இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
மேலும் படிக்க | இந்த தடவை ஆரஞ்ச் கேப் விராட் கோலிக்குதானாம்- எப்படி தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR