ஐபிஎல் 2022 வெற்றிகரமாக முடிவடைந்தது. முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து மோசமாக தொடரில் இருந்து வெளியேறியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார் கங்குலி - அரசியலில் என்டிரி?


கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல் சிறப்பாக அமையவில்லை. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் மிக மோசமாக இருந்தது. குறிப்பாக சேஸிங்கில் பெரும் தடுமாற்றத்தை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது. இதற்கு முக்கிய காரணம் பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி முக்கிய வீரர்களை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இஷான் கிஷனுக்கு தேவையில்லாமல் 15 கோடி ரூபாய் செலவு செய்தது. 



இதனால் மற்ற நல்ல பிளேயர்களை ஏலத்தில் எடுக்க போட்டியிட முடியாமல் போனது. கடந்த முறை மும்பை அணியில் விளையாடிய போல்ட் உள்ளிட்ட நட்சத்திர பிளேயர்கள் ஏலம் எடுத்திருந்தால் மிகப்பெரிய பவுலிங் யூனிட்டாக மும்பை இருந்திருக்கும். இதற்கு மாறாக காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் ஜோப்ரா ஆர்ச்சரை மும்பை டார்கெட் செய்தது. சொல்லி அடித்ததுபோல் ஏலத்தில் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தாலும், இந்த ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடவில்லை. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.


5 முறை சாம்பியன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு சென்றதை மும்பை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பிடித்ததால், அவர்களை பார்த்து சற்று ஆறுதல் அடைந்தனர். தோல்வி குறித்து ரோகித் சர்மா பேசும்போது அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பலமாக மீண்டு வருவோம் எனத் தெரிவித்துள்ளார். 



இதற்கிடையே, உலகளவில் கடந்த நான்கு மாதங்களில் யூ டியூப்பில் பிரபலமான ஸ்போர்ட்ஸ் அணிகள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது. லிவர்பூல் மற்றும் மான்செஸ்டர் அணிகள் 2வது மற்றும் 3வது இடத்தில் இருக்கும் நிலையில், பார்சிலோனா அணி 4வது இடத்தில் இருக்கிறது. 5வது இடத்தில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. 


மேலும் படிக்க | T20 World Cup: ரோகித் சர்மா - விராட் கோலிக்கு இடமில்லையா? - புது டிவிஸ்ட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR