தோனிக்கு பிறகு இவர்தான் CSK கேப்டன்: போட்டுடைத்த அணி வீரர்
தோனி ஓய்வெடுக்க முடிவெடுத்தால், CSK அணியின் அடுத்த கேப்டனாக யார் இருப்பார்? இது குறித்து சில வீரர்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானுமான எம்எஸ் தோனி, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 30) வீரர்கள் தக்கவைக்கப்படும் செயல்முறையில், தனது ஃப்ரான்சைசின் இரண்டாவது தேர்வாக இருப்பதற்கான ஒரு முடிவை எடுத்தார். இதன் மூலம், தனது அணியின் சக வீரரான ரவீந்திர ஜடேஜா முதல் தேர்வாக மாறுவதையும், அவருக்கு ரூ. 16 கோடி கிடைப்பதையும் அவர் உறுதி செய்தார். தோனிக்கு ரூ. 12 கோடி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் சிஎஸ்கே (CSK) வீரர் ராபின் உத்தப்பா, அணியில் ஜடேஜாவிற்கு இருக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டதால் தோனி இப்படி செய்ததாக தெரிவித்தார். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி ரூ.8 கோடிக்கும், தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ரூ.8 கோடிக்கும் தக்கவைக்கப்பட்டனர். வீரர்களின் தக்கவைப்பு செயல்முறையில், சி.எஸ்.கெ அணி ரூ.42 கோடியை செலவழித்தனர்.
தோனி (MS Dhoni) காம்படீடிவ் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வெடுக்க முடிவெடுத்த பின்னர், ஜடேஜாவை அடுத்த கேப்டனாக சி.எஸ்.கெ அணி பார்ப்பதாகவும், அதற்காக அவரை தயார் செய்வதாகவும் உத்தப்பா கூறினார். இதுவே சி.எஸ்.கே-வின் தக்கவைப்பு செயல்முறையின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
“ஜடேஜாவுக்கு அணியில் இருக்கும் முக்கியத்துவம் தோனிக்குத் தெரியும். நான் புரிந்து கொண்டதில் இருந்து, எம்.எஸ் தோனி ஓய்வு பெறும்போது, அவருக்கு அடுத்தபடியாக அணியை வழிநடத்தும் ஒருவராக ஜடேஜா இருக்கக்கூடும்.” என்று உத்தப்பா ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறினார்.
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்தீவ் படேலும், சிஎஸ்கே அணி, தங்கள் அடுத்த கேப்டனாக ஜடேஜாவை பார்க்கிறது என தான் நம்புவதாக தெரிவித்தார்.
பந்துவீச்சு பயிற்சியாளர் லக்ஷ்மிபதி பாலாஜி கூறுகையில், எம்.எஸ். தோனி இந்த சிஎஸ்கெ அணியின் 'இதயம் மற்றும் ஆன்மாவாக' இருப்பார் என்றார். “ஜடேஜா (Ravindra Jadeja) ஒரு நிரூபிக்கப்பட்ட சிஎஸ்கே வீரர். சமீப காலங்களில் அவர் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் அபாரமாக விளங்கியுள்ளார். மொயீன் அணிக்கு நல்ல சமநிலையை அளிக்கிறார். ருதுவை தக்கவைத்ததிலும் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. அவரது திறமையில் அணிக்கு எந்த சந்தேகமும் இல்லை.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தோனிக்கு மாற்றாக யாராலும் இருக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை, அவர் எப்போதும் என் கேப்டன். அவர் சி.எஸ்.கே உரிமையாளர்களின் இதயமும் ஆன்மாவுமாக இருக்கிறார். ரசிகர்களும் அவரைப் பார்க்க ஆர்வமாக உள்ளார்கள்.” என்று பாலாஜி மேலும் தெரிவித்தார்.
ALSO READ:SRH -க்கு ‘Good bye' சொன்ன வார்னர், பேரிஸ்டோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR