SRH -க்கு ‘Good bye' சொன்ன வார்னர், பேரிஸ்டோ

சன்ரைசர்ஸ் அணி ரீடென்சன் குறித்து தெரிவித்த மெசேஜூக்கு பதிலளித்துள்ள வார்னர் மற்றும் பேரிஸ்டோ, இதுவரை ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 30, 2021, 09:27 PM IST
SRH -க்கு ‘Good bye' சொன்ன வார்னர், பேரிஸ்டோ title=

ஐ.பி.எல் போட்டியில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளன. அந்த அணிகள் வீரர்களை புதிதாக ஏலம் மூலம் எடுக்க உள்ளது. ஏற்கனவே உள்ள அணிகளும் இந்த ஏலத்தில் பங்கேற்கலாம். அதற்கு முன்பு தங்கது அணியில் தக்க வைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் லிஸ்டை கொடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஒரு அணி அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். வீரர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தது. 

ALSO READ | IPL 2022 Auction: ஐ.பி.எல்.லில் தக்கவைக்கப்படும் வீரர்கள் யார்? கசிந்தது தகவல்

ஐ.பி.எல் நிர்வாகத்துக்கு, அனைத்து அணிகளும் அதிகாரப்பூர்வமாக தக்கவைக்கபட்ட வீரர்களின் லிஸ்டை சமர்பித்துவிட்டன. இதுவரை வெளியான தகவலில், ரோகித் சர்மா, பொல்லார்டு மற்றும் ஜஸ்பிரித் பும்ராவை மும்பை அணி தக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை அணி நிர்வாகம் தோனி, ஜடேஜா, ருத்ராஜ் மற்றும் மொயின் அலியை தக்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சனையும், பெங்களூரு அணி விராட் கோலி, மேகஸ்வெல் ஆகியோரை தக்கவைத்திருப்பதாக கூறப்படுகிறது.

ALSO READ | என்னை அணியில் சேர்க்க வேண்டாம் - ஹர்திக் பாண்டியா!

சன்ரைசர்ஸ அணியில் வில்லியம்சம்சன் மட்டும் தக்கவைக்கப்பட்டு, வார்னர், பேரிஸ்டோ மற்றும் ரஷித்கானை விடுவித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த அணி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இதுவரை தங்களோடு இணைந்து பயணித்த அனைத்து வீரர்களுக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளது. ரீட்டெய்ன் செய்யப்படாத வீரர்களை ஏலத்தில் மூலம் எடுக்க முயற்சிப்பதாகவும் கூறியுள்ளது. இந்த பதிவுக்கு பேரிஸ்டோவும், வார்னரும் நன்றி தெரிவித்துள்ளனர். அவர்களின் பதிவில், இதுவரை ஒத்துழைப்பு கொடுத்த அணி நிர்வாகத்துக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். ஒரு சில சமயங்களில் புதிய பாதையில் பயணிக்க வேண்டியது அவசியமாகிறது என்றும் தெரிவித்துள்ளனர். அவர்களின் இந்தக் கருத்து மூலம் சன்ரைசர்ஸ் அணியில் வார்னரும், பேரிஸ்டோவும் தொடர விரும்பவில்லை என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News