நான்காவது அணியாக பிளே ஆப்பிற்கு நுழைய போவது யார்?
ஐபிஎல் பிளே ஆப் போட்டிகள் மே 24ம் தேதி தொடங்க உள்ளது.
ஐபிஎல் 2022 போட்டிகள் மார்ச் 26ம் தேதி முதல் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா சூழல் காரணமாக மும்பையில் உள்ள 4 மைதானங்களில் மட்டும் அனைத்து போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. பிளே ஆப் மற்றும் பைனல் போட்டிகள் மட்டும் அஹமதாபாத், கொல்கத்தா மைதானங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றதால் ஒவ்வொரு அணியிலும் உள்ள சில முக்கிய வீரர்கள் மற்ற அணிகளில் விளையாடி வருகின்றனர்.
மேலும் படிக்க | சென்னை அணியில் இருந்து தோனி வெளியேறினால்....பாக்.வீரரின் ஆருடம்
ஐபிஎல்-ல் பலம் வாய்ந்த அணிகள் என்று கருதப்படும் சென்னை மற்றும் மும்பை அணிகள் இந்த வருட பிளே ஆப் சுற்றில் இருந்து முதல் இரண்டு அணிகளாக வெளியேறி உள்ளனர். ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்ததில் இருந்து தொடர் தோல்விகளை இரண்டு அணிகளும் சந்தித்து வந்ததால் இந்த நிலையை சந்தித்து வருகின்றனர். மேலும் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னை அணி ஒரு சீசனில் 9 தோல்விகளை சந்தித்து உள்ளது.
பிளே ஆப் சுற்றிற்கு குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்று விட்ட நிலையில் நான்காவது அணியாக யார் உள்ளே செல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. தற்போது பெங்களூர் அணி 14 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இன்று பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறுவர். டெல்லி அணி மீதம் உள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெரும் பட்சத்தில் பிளே ஆப்பிற்கு தகுதி பெற அதிக வாய்ப்பு உள்ளது. அதே சமயத்தில் பெங்களூர் அணி குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே ஆகா வேண்டும். தோல்வி பெரும் பட்சத்தில் பிளே ஆப் வாய்ப்பை இழக்க நேரிடலாம். 4வது இடத்திற்கு தகுதி பெற ஒவ்வொரு அணியும் அதிக ரன் ரேட்டில் வெற்றி பெற்றாக வேண்டியதும் முக்கியமான ஒன்று.
மேலும் படிக்க | டிஆர்எஸூக்கு ’நோ’அவுட்டை ஏத்துக்க மாட்டேன் - கொல்கத்தா வீரரின் பிடிவாதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR