இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2022க்கான அகமதாபாத் அணியின் கேப்டனாக இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.   மும்பை இந்தியன்ஸ் (MI) அணியில் ஹர்திக் பாண்டியா பல ஆண்டுகளாக விளையாடி அந்த அணிக்கு ஒரு முக்கிய வீரராக இருந்தார்.  இருப்பினும், இந்த ஆண்டு நடைபெற உள்ள மெகா ஏலத்தில் மும்மை அணி ஹர்திக் பாண்டியாவை தக்கவைக்க வில்லை.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


கேப்டன் ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் கீரன் பொல்லார்ட் ஆகியோரை தக்கவைதுள்ளது மும்பை.   ஹர்திக் தவிர, இஷான் கிஷன், க்ருனால் பாண்டியா மற்றும் டிரென்ட் போல்ட் போன்ற குறிப்பிடத்தக்க முக்கியமான வீரர்களையும் ஏலத்தில் விட்டுள்ளது.  இவற்றில் பல வீரர்களை மீண்டும் அணியில் எடுக்கும் முயற்சியில் மும்மை ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   இதற்கிடையில், ஹர்திக் பானியாவை இந்த வருடம் ஐபிஎல்-லில் புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் தங்கள் அணியில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.   மேலும், ஆப்கானிஸ்தான் லெக் ஸ்பின்னர் ரஷித் கான் மற்றும் இளம் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷன் ஆகியோரை தங்களது அணியில் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளது. 



தலைமை பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நெஹ்ரா இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியில் உதவி பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். மேலும், விக்ரம் சோலங்கி அணியின் இயக்குநராக இருப்பார் என்றும், கேரி கிர்ஸ்டன் வழிகாட்டியாக இருப்பார் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன.  ஐபிஎல் ஏலம் அடுத்த மாதம் பெங்களூருவில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.


ALSO READ | ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் வெங்கடேச ஐயர் சிறந்த தேர்வா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR