GT Squad for IPL 2023: இந்தியன் பிரீமியர் லீக்கின் அடுத்த கட்ட ஏலம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 23) நடைபெற்றது. குஜராத் அணிக்கு 7 வீரர்கள் தேவைப்பட்டனர். ஏலத்தின் முதல் வீரராக கேன் வில்லியம்சனை அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் வாங்கியது, குஜராத் அணி தனது கடைசி வீரராக மோகித் சர்மாவை ஏலத்தில் வாங்கியது. இந்த அணியில் மொத்த எத்தனை வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் விலை எவ்வளவு? அணியின் உரிமையாளர், பயிற்சியாளர்கள் யார்? என குஜராத் டைட்டன்ஸ் அணியைக் குறித்து அனைத்து விவரங்களையும் தெரிந்துக்கொள்ளுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்த ஏழு வீரர்களின் விவரம்:


கேன் வில்லியம்சன் (ரூ. கோடி)
வில்லியம்சனை எடுக்க வேறு எந்த உரிமையாளரும் ஆர்வம் காட்டவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அவரை அவரது அடிப்படை விலையில் ஏலம் எடுத்தது. வேறு யாரும் ஏலம் எடுக்கவில்லை. இறுதியாக கேன் வில்லியம்சன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விற்கப்பட்டார்.


ஒடியன் ஸ்மித் (ரூ.5 கோடி 25 லட்சம்)
மேற்கிந்திய தீவுகளின் ஒடியன் ஸ்மித்தை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது. அவரது அடிப்படை விலை 2 கோடி. மற்ற அணிகளும் அவரை ஏலம் எடுத்தன. ஆனால் குஜராத் வெற்றி பெற்றது. ஒடியன் ஸ்மித்தை குஜராத் டைட்டன்ஸ் அணி 5.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.


மேலும் படிக்க: IPL Expensive Players List: 2023 ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் யார்?


ஸ்ரீகர் பாரத் (ரூ. 1 கோடியே 20 லட்சம்)
ஸ்ரீகர் பாரத் அணியின் அடிப்படை விலை ரூ.20 லட்சமாக இருந்தது. அவர் எடுக்க மற்ற அணிகளுக்கு இடையே போட்டி தொடங்கியபோது, ​​குஜராத் டைட்டன்ஸ் அணியும் விலையை உயர்த்திக் கொண்டே இருந்தது. 1 கோடியே 20 லட்சத்துக்கு குஜராத் ஏலம் எடுத்தது. அதன்பிறகு மற்ற அணிகள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. ஏலத்தில் குஜராத் அணியால் வாங்கப்பட்ட மூன்றாவது வீரர் ஸ்ரீகர் பரத்.


சிவம் மாவி (ரூ. 6 கோடி)
சிவம் மாவி கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடினார். இம்முறை அவரது பெயர் ஏலத்தில் இருந்தது. ஷிவம் மாவியை குஜராத் டைட்டன்ஸ் ஏலத்தில் வாங்கியது. ஷிவாமின் அடிப்படை விலை 40 லட்சம், குஜராத் அவரை 6 கோடிக்கு வாங்கியது.


மேலும் படிக்க: IPL Mini Auction 2023: சாம் கரண் காட்டில் பண மழை! ஐபில் வரலாற்றில் புது உச்சம்


ஊர்வில் படேல்:
 ரூ. 20 லட்சத்துக்கு குஜராத் டைட்டன்ஸ் ஏலத்தில் வாங்கியது.


ஜோஷ்வா லிட்டில்:
ரூ 4 கோடியே 40 லட்சத்துக்கு ஜோஷ்வா லிட்டிலை ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் எடுத்தது.


மோஹித் ஷர்மா:
ரூ. 50 லட்சம் கொடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி மோஹித் ஷர்மாவை வாங்கியது.


மேலும் படிக்க: பொல்லார்டு இடத்தை நிரப்ப வந்த கேம்ரூன் கிரீன்! 2 ஆண்டுகளுக்கு முன்பே மும்பை போட்ட செம ஸ்கெட்ச்


குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் பட்டியல் மற்றும் அவர்களின் விலை:


வீரர்கள் விலை
அபினவ் சதராங்கனி ரூ.2 கோடியே 60 லட்சம்
அல்ஜாரி ஜோசப் ரூ.2 கோடியே 40 லட்சம்
பி. சாய் சுதர்சன் ரூ.20 லட்சம்
தர்ஷன் நல்கண்டே ரூ.20 லட்சம்
டேவிட் மில்லர் ரூ.3 கோடி
ஹர்திக் பாண்டியா ரூ.15 கோடி
ஜெயந்த் யாதவ் ரூ.1 கோடியே 70 லட்சம்
மேத்யூ வேட் ரூ.2 கோடியே 40 லட்சம்
முகமது ஷமி ரூ.6 கோடியே 25 லட்சம்
நூர் அகமது ரூ.30 லட்சம்
பிரதீப் சங்வான் ரூ.20 லட்சம்
ஆர். சாய் கிஷோர் ரூ.3 கோடி
ராகுல் தெவாடியா ரூ.9 கோடி
ரஷித் கான் ரூ.15 கோடி
சுப்மான் கில் ரூ.8 கோடி
விஜய் சங்கர் ரூ.1 கோடியே 40 லட்சம்
விருத்திமான் சாஹா ரூ.1 கோடியே 90 லட்சம்
யாஷ் தயாள் ரூ.3 கோடியே 20 லட்சம்
மோஹித் சர்மா ரூ.50 லட்சம்
ஜோஷ்வா லிட்டில் ரூ.4 கோடியே 40 லட்சம்
உர்வில் படேல் ரூ.20 லட்சம்
சிவம் மாவி ரூ.6 கோடி
ஸ்ரீகர் பாரத் ரூ.1 கோடியே 20 லட்சம்
ஒடியன் ஸ்மித் ரூ.5 கோடி 25
கேன் வில்லியம்சன் ரூ.2 கோடி

மேலும் படிக்க: 17.50 கோடிகளை கொட்டி மும்பை இந்தியன்ஸ் தூக்கிய கேம்ரூன் கிரீன்! யார் இவர்?


ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல்


தக்க வைக்கப்பட்ட வீரர்கள் விவரம்:
அபினவ் சத்ராங்கனி, அல்சாரி ஜோசப், பி சாய் சுதர்ஷன், தர்ஷன் நல்கண்டே, டேவிட் மில்லர், ஹர்திக் பாண்டியா, ஜெயந்த் யாதவ், மேத்யூ வேட், முகமது ஷமி, நூர் அகமது, பிரதீப் சங்வான், சாய் கிஷோர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ஷுப்மான் கில், விஜய்மன் சாஹா, யாஷ் தயாள்


ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்:
மோஹித் சர்மா, ஜோசுவா லிட்டில், உர்வில் படேல், சிவம் மாவி, ஸ்ரீகர் பாரத், ஒடின் ஸ்மித், கேன் வில்லியம்சன்


குஜராத் அணியின் உரிமையாளர் மற்றும் பயிற்சியாளர் விவரங்கள்:


உரிமையாளர்: இரேலியா கம்பெனி பிரைவேட் லிமிடெட் (CVC Capital Partners)
தலைமை பயிற்சியாளர்: ஆஷிஷ் நெஹ்ரா
உதவி பயிற்சியாளர்: அப்துல் நயீம்
பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் வழிகாட்டி: கேரி கிர்ஸ்டன்
சுழல் பந்துவீச்சு பயிற்சியாளர்: ஆஷிஷ் கபூர்
உதவி பயிற்சியாளர்: மிதுன் மன்ஹாஸ்
உதவி பயிற்சியாளர்: நரேந்திர நேகி
பிட்னஸ் பயிற்சியாளர்: ரஜினிகாந்த் சிவஞானம்


மேலும் படிக்க: சாம் கரண் போனால் என்ன பென் ஸ்டோக்ஸை தட்டி தூக்கிய சிஎஸ்கே! தோனியின் மாஸ்டர் பிளான்


ஐபிஎல் 2022 கோப்பையை கைப்பற்றிய குஜராத் டைட்டன்ஸ்:
ஹர்திக் பாண்டியாவின் தலைமையின் கீழ், குஜராத் டைட்டன்ஸ் கடந்த ஆண்டு தனது முதல் சீசனில் விளையாடியது. அதில் அந்த அணி சிறப்பாக செயல்பட்டது. ஆரம்பம் முதல் நாக் அவுட் வரை அந்த அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் சீசனில், குஜராத் இறுதிப் போட்டியில் வென்றது. அதனால்தான் இந்த சீசனில் அணி பெரிய மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ