IPL Mini Auction 2023: சாம் கரண் காட்டில் பண மழை! ஐபில் வரலாற்றில் புது உச்சம்

ஐபில் வரலாற்றில் புது உச்சமாக 18.50 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. அவரை ஏலம் எடுக்க சென்னை, மும்பை உள்ளிட்ட அணிகள் கடும் போட்டியிட்டன.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 23, 2022, 06:52 PM IST
  • சாம் கரண் காட்டில் பண மழை
  • முட்டி மோதிய ஐபிஎல் அணிகள்
  • 18.50 கோடிக்கு வாங்கியது பஞ்சாப்
IPL Mini Auction 2023: சாம் கரண் காட்டில் பண மழை! ஐபில் வரலாற்றில் புது உச்சம் title=

ஐபிஎல் 2023 தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் மிகப்பிரம்மாண்டமாக தொடங்கியது. ஏலம் தொடங்கியது முதலே அனல் பறந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம் கரண் எப்போது ஏலத்துக்கு வருவார் என அணிகள் காத்திருந்தன. அவரின் ஏலத்தில் வந்ததும் அனைத்து அணிகளும் கோதாவில் குதித்தன. முதலில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மல்லுக்கட்டின. இடையில் சேர்ந்து கொண்ட மும்பை கொஞ்ச நேரம் முட்டி மோதியது. 11 கோடி வரை சென்றபோது மூன்று அணிகளுக்கும் மேல் சாம்கரணுக்காக மல்லுக் கட்டிக் கொண்டிருந்தன.

மேலும் படிக்க | 'வேலை முடிந்தால் கைக்கழுவி விடுவார்கள்' தனது முன்னாள் ஐபிஎல் அணியை சாடிய கிறிஸ் கெயில்

மும்பை, சென்னை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சாம்கரணை எடுக்க ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தபோது பஞ்சாப் அணியும் எட்டிக் குதித்தது. அவரை எப்படியும் ஏலம் எடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தது பஞ்சாப் அணி. அதனால், தாங்கள் கோதாவில் குதித்த பின்னர் ஒருமுறைகூட பின்வாங்கவில்லை. ராஜஸ்தான் அணி 14 கோடி வரை மோதிப் பார்த்தது. அதன்பிறகும் சாம் கரணுக்கான மதிப்பு எகிறிக் கொண்டே சென்றதால், ராஜஸ்தான் பின்வாங்கியதும், சென்னை அணி உள்ளே குதித்தது. அதிரடியாக சாம் கரணக்காக மோதிப் பார்த்தது. திடீரென மும்பையும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸூம் மீண்டும் உள்ளே வந்தன. 

இதனால் சாம் கரணுக்கான ஏலத் தொகை 17 கோடிகளை கடந்தது. அப்போது சென்னை அணி பின்வாங்கியது. பஞ்சாப் அணி தொடர்ந்து முட்டி மோதிக் கொண்டிருந்தது. மும்பை தங்களால் இயன்றவரை மோதிப் பார்த்தும் பஞ்சாப் அணி விடவில்லை. இறுதியாக 18.50 கோடிக்கு சாம் கரணை தங்கள் வசப்படுத்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதன்மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரரானார். அவரை தொடர்ந்து கேம்ரூன் கிரீன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் காட்டிலும் பண மழை கொட்டியது.

மேலும் படிக்க | ஐபிஎல் ஏலத்தில் கிங் மேக்கர் இவர் தான்!... என்ன செய்யப்போகிறார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News