ஐபிஎல் 2023: நியூசிலாந்து மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து வெளியேற்றப்பட்டார். வேகப்பந்து வீச்சாளர் ஜேமிசன் தனது முதுகு அழுத்த முறிவுக்காக அறுவை சிகிச்சை செய்ய உள்ளார். அறுவை சிகிச்சை முடிந்து குணமாக 3-4 மாதங்கள் ஆகும் என்பதால் ஐபிஎல் 2023ல் விளையாடுவதற்கான தனது வாய்ப்பை இழந்துள்ளார். ஆகஸ்ட் மாதம் நடைபெறும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு திரும்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். ஜேமிசன் விலகி உள்ளதால் மாற்று வீரரை விரைவில் சிஎஸ்கே அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | IND vs AUS: கேஎல் ராகுலுக்கு செக் வைத்த பிசிசிஐ! அணியில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!


“ஜேமிசன் ஒரு முதுகு அறுவை சிகிச்சை நிபுணரைப் பார்த்திருக்கிறார், இந்த வாரத்தின் பிற்பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார். இது ஜேமிசன்க்கு ஒரு சவாலான, கடினமான நேரம் மற்றும் எங்களுக்கு ஒரு பெரிய இழப்பு. அவர் அணிக்கு ஒரு முக்கிய வீரராக இருந்தார்” என்று நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறி உள்ளார்.  வரும் ஜூன் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஜேமிசன் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் மினி-ஏலத்தில், நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி ஜேமிசனை வாங்குவதை மையமாகக் கொண்டிருந்தனர்.  தற்போது ஜேமிசனின் காயம் CSK-க்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.  சென்னை அணி விரைவில் மாற்று வீரரின் அறிவிப்பை வெளியிடுவார்கள்.  மகேஷ் தீக்ஷனா, நிஷாந்த் சிந்து, துஷார் தேஷ்பாண்டே மற்றும் மதீஷா பத்திரனா உள்ளிட்ட மாற்றுத் வீரர்கள் உள்ளனர்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:


எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சிம்மத் சௌத்ரி, முகேஷ் சிம்மத் சௌத்ரி, , மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேமிசன், அஜய் மண்டல், பகத் வர்மா.


மேலும் படிக்க | கோலி கொடுத்தாரு வேண்டாம் என சொல்லிட்டேன் - பார்சல் உணவு குறித்து டிராவிட் கலகல


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ