ஐபிஎல் 2023 போட்டிகளின் முழு அட்டவணையும் வெளியாகியிருக்கிறது. இதில் முதல் போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த ஐபிஎல் தொடர் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரின்போது ஐபிஎல் தொடர் புதிய உச்சத்தை எட்ட இருக்கிறது. அதாவது ஐபிஎல் வரலாற்றில் 1000வது போட்டி விளையாடப்பட உள்ளது. அந்த பெருமை மிக்க போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
ஐபிஎல் வரலாற்றைப் பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இரண்டும் பலம் வாய்ந்த அணிகளாக உள்ளன. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்றிருக்கிறது. இத்தகைய மிகப்பெரிய கவுரவத்தை கொண்டிருக்கும் இந்த அணிகள் ஐபிஎல் வரலாற்றில் நடைபெறும் 1000வது போட்டியில் மோதுகின்றன. இப்போட்டி மே 6 ஆம் தேதி சனிக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
Schedule of CSK in IPL 2023. pic.twitter.com/RsccA9Z9XN
— Johns. (@CricCrazyJohns) February 17, 2023
சிஎஸ்கே தொடக்க ஆட்டத்தில் குஜாரத்துடன் விளையாட உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஏப்ரல் 2 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மே 28 ஆம் தேதி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களைப் பொறுத்தவரை இந்த தொடர் மறக்க முடியாத தொடராக இருக்கப்போகிறது. ஐபிஎல் 2023 உடன் தோனி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு விடை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அவருடைய ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.
மேலும் படிக்க | சிஎஸ்கே அணியில் இணைந்த மற்றொரு இலங்கை வீரர்! யாருக்கு பதிலாக தெரியுமா?
மேலும் படிக்க | நான் நிச்சயம் இந்த ஆண்டு விளையாடுவேன்! அப்டேட் கொடுத்த சிஎஸ்கே வீரர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ