IPL 2023: ஓய்வை அறிவிக்கும் தோனி... சிஎஸ்கேவின் வருங்காலம் யார்?
MS Dhoni Retirement: கேப்டன் தோனி இந்த சீசனுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக சிஎஸ்கே அணி தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
IPL 2023, MS Dhoni Retirement: வரும் ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவின் பல நகரங்களின் நடைபெறும் நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளது. 10 அணிகள் மோதும் இப்போட்டியில், இம்முறை Impact Player என்ற 12ஆவது வீரரின் சேர்க்கை என்பது ரசிகர்களிடம் மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான தோனி, இந்த சீசனுடன் ஓய்வு பெறப்போவதாக கூறப்படுவதுதான் சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், தோனி அதிகாரப்பூர்வமாக சிஎஸ்கே அணியிடம் தெரிவிக்கவில்லை என்றாலும், அவர் தனது கடைசி ஐபிஎல் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் சொந்த மக்கள் முன்னிலையில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாக தோனியிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிஎஸ்கே நிர்வாகம் எதிர்பார்ப்பதாக தெரிகிறது. இந்த ஆண்டு, ஐபிஎல் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அதன் பாரம்பரிய Home & Away வடிவத்திற்குத் திரும்புகிறது.
சிஎஸ்கே நிர்வாகி ஒருவர் கூறுகையில், "அவர் தனக்குப் பிடித்தமான மைதானத்தில் விடைபெற விரும்புவதால், இது அவரது கடைசி சீசனாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எப்படியிருந்தாலும், ஐபிஎல் தொடங்குவதற்குள் நாங்கள் தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.
மேலும் படிக்க | ஜடேஜாவுக்கு சிக்கல்! பந்தை சேதப்படுத்திய புகாரில் தண்டனை
சமீப காலங்களில், சிஎஸ்கே அணியில் தோனியின் எதிர்காலம் குறித்து பல ஊகங்கள் உள்ளன. 2022இல் அவர் சிஎஸ்கே கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தபோது அது தீவிரமடைந்தது. ஜடேஜாவின் செயல்திறன் போதுமான அளவிற்கு இல்லாதபோது, கேப்டன் பொறுப்பு தோனியிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. அனுபவம் வாய்ந்த கேப்டன்களான பென் ஸ்டோக்ஸ், அஜிங்க்யா ரஹானே ஆகியோரின் வருகை, தோனி இறுதியாக தனது விளையாட்டு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய காலம் வந்துவிட்டதாக கூறுகிறது.
அந்த சிஎஸ்கே நிர்வாகி மேலும் கூறுகையில்,"தோனி இன்னும் தனது முடிவை எங்களிடம் தெரிவிக்கவில்லை. எங்களிடம் கூற அவருக்கு எந்த அழுத்தமும் இல்லை. அவர் எங்கள் கேப்டன். அணிக்கு சிறந்ததைச் செய்வார். நிர்வாகத்தைப் பொறுத்தவரை, தோனி இந்த சீசனுக்கு பிறகும் அணியில் தொடர விரும்பினாலும், எங்களின் முழு ஆதரவு கிடைக்கும்" என்றார்.
சிஎஸ்கேவின் அடுத்த தலைமை குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. அணிக்கு பென் ஸ்டோக்ஸ், அஜிங்க்யா ரஹானே மற்றும் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் ஆப்ஷனில் உள்ளனர். ஸ்டோக்ஸ் பிடித்தவராக இருந்தாலும், அவரது இங்கிலாந்து அணியின் நிபந்தனைக்குட்பட்ட NOC ஒரு சவாலாக இருக்கலாம். அவரது தேசிய அணியில் வாய்ப்பு வந்தால், ஸ்டோக்ஸ் ஐபிஎல் முழு சீசனிலும் விளையாடுவார் என்பது சாத்தியமில்லை. எனவே, உள்நாட்டு கிரிக்கெட்டில் மகாராஷ்டிராவை வழிநடத்திய ருதுராஜ், சிஎஸ்கேவின் வ வருங்காலமாக இருப்பார் என கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ