நாக்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2வது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் ஆஸ்திரேலிய அணியின் 5 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டநாயகனாக ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஐசிசி இப்போது அபராதம் விதித்துள்ளது. பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ஜடேஜாவுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 விழுக்காடு பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விதிமுறை மீறிய அவருக்கு ஐசிசி 1 டிமெரிட் புள்ளிகளையும் கொடுத்துள்ளது.
நாக்பூர் டெஸ்ட்
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட ஆலன் பார்டர் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. நாக்பூரில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. டாஸ் வெற்றி பெற்று முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய அந்த அணி 177 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி 223 ரன்கள் முன்னிலை பெற்றது.
மேலும் படிக்க | INDvsAUS: இந்தியா அபார வெற்றி! ஆஸ்திரேலியாவுக்கு தலைகுணிவு
இந்தியா வெற்றி
இதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் சீட்டுக் கட்டுகள்போல் சரிந்தது. ஒவ்வொரு பேட்ஸ்மேனும் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால் வெறும் 91 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலியா. துல்லியமாக பந்துவீசிய அஸ்வின் ஆஸ்திரேலிய அணியின் 5 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்த வெற்றி மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
ஜடேஜாவுக்கு அபராதம்
— ANI (@ANI) February 11, 2023
இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் பேட்டிங் அரைசதம் அடித்திருந்தார். 2வது இன்னிங்ஸிலும் 2 விக்கெட்டுகளை எடுத்தார் அவர். அதேநேரத்தில் முதல் இன்னிங்ஸ் விளையாடும்போது ஜடேஜா பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கினார். சிராஜ் கையில் இருந்து ஏதோ ஒரு க்ரீமை எடுத்து அவர் பந்தில் தடவியது தெரிய வந்தது. இந்த வீடியோவை சுட்டிக் காட்டி ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் தங்களின் கடும் அதிருப்தியை தெரிவித்தனர்.
(@MeetInTheStands) February 10, 2023
இதனைத் தொடர்ந்து ஐசிசி ஜடேஜாவுக்கு அபராதம் விதித்துள்ளது. ஐசிசி விதிமுறைகளின்படி லெவல் 1 விதிமீறலில் ஈடுபட்ட ஜடேஜாவுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 விழுக்காடு பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1 டிமெரிட் புள்ளிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ