ஐபிஎல் 2023 தொடருக்கான முன் தயாரிப்புகளை அனைத்து அணிகளும் தொடங்கி இருக்கின்றன. கொல்கத்தா அணி புதிய பயிற்சியாளரை நியமித்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் மயங்க் அகர்வாலை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது. கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த தகவலுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. அந்த விளக்கத்தில், கேப்டன் மாற்றம் தொடர்பாக பரவும் செய்தி தொடர்பாக அணி நிர்வாகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை எனத் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த பதிவில், "பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன்சி தொடர்பான ஒரு குறிப்பிட்ட ஸ்போர்ட்ஸ் நியூஸ் இணையதளம் வெளியிட்ட செய்தி அறிக்கை, கடந்த சில நாட்களாகப் பரவி வருகிறது. அணியின் எந்த அதிகாரியும் இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பதை நாங்கள் கூறுகிறோம்." எனத் தெரிவித்துள்ளது. 


மயங்க் அகர்வால் ரெக்கார்டு


மயங்க் அகர்வால் ஐபிஎல் 2022-ல் PBKS அணிக்காக மொத்தம் 13 போட்டிகளில் விளையாடி 16.33 சராசரி மற்றும் 122.50 ஸ்ட்ரைக் ரேட்டில் 196 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் ஒரே ஒரு போட்டியில் மட்டும் 50 ரன்களைக் கடந்தார். அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். ஆனால் 2020 மற்றும் 21 ஆம் ஆண்டுகளில் முறையே சிறப்பாக விளையாடி தொடர்ச்சியாக 400 ரன்களுக்கும் மேல் எடுத்திருந்தார். கடந்த சீசனில் குறிப்பிடும்படியான ஆட்டம் அவரிடம் இருந்து வெளிப்படவில்லை. 



அனில் கும்பிளே நீக்கம்


அதேநேரத்தில் பயிற்சியாளர் அனில் கும்பிளேவை நீக்க அணி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. கேப்டன் மாற்றம் குறித்து விளக்கம் கொடுத்துள்ள பஞ்சாப் அணி நிர்வாகம், பயிற்சியாளர் குறித்து பரவும் தகவலுக்கு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. புதிய பயிற்சியாளர் பதவிக்காக ட்ரெவர் பெய்லிஸ் மற்றும் இயோன் மோர்கன் ஆகியோருடன் அந்த அணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


பஞ்சாப் அணி பரிதாபம்


ஐபிஎல் 2022 சீசனில், பஞ்சாப் 14 போட்டிகளில் ஏழு வெற்றிகள் மற்றும் ஏழு தோல்விகளுடன் அட்டவணையில் ஆறாவது இடத்தைப் பிடித்தது. முந்தைய இரண்டு சீசன்களில், எட்டு அணிகள் மட்டுமே போட்டியில் பங்கேற்ற போது, 2021-ல் ஆறு வெற்றிகளை பெற்று 6வது இடத்தைப் பிடித்தது. அதே சமயம் 2020-ல் 6வது இடத்தைப் பிடித்தது. 


மேலும் படிக்க | பும்ரா போல பந்துவீசி கலாய்த்த ஹர்திக் பாண்டியா! வைரலாகும் வீடியோ!


மேலும் படிக்க | அப்ரிடிக்கு பதிலாக பாகிஸ்தான் அணியில் இணைந்த வீரர்! இந்தியாவிற்கு மேலும் சிக்கல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ