அப்ரிடிக்கு பதிலாக பாகிஸ்தான் அணியில் இணைந்த வீரர்! இந்தியாவிற்கு மேலும் சிக்கல்!

Asia Cup 2022: ஆசியக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் ஷஹீன் அப்ரிடிக்கு பதிலாக  முகமது ஹஸ்னைன் அணியில் இடம்பிடித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Aug 24, 2022, 07:19 AM IST
  • ஆசிய கோப்பை போட்டி டி20 வடிவில் நடைபெற உள்ளது.
  • இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆகஸ்ட் 28ம் தேதி மோதுகின்றன.
  • இந்த போட்டி அதிக எதிர்பார்ப்பில் உள்ளது.
அப்ரிடிக்கு பதிலாக பாகிஸ்தான் அணியில் இணைந்த வீரர்! இந்தியாவிற்கு மேலும் சிக்கல்! title=

ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கும் டி20 ஆசிய கோப்பை 2022க்கான பாகிஸ்தானின் 15 பேர் கொண்ட அணியில் ஷஹீன் அப்ரிடிக்கு பதிலாக வலது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் இடம் பெற்றுள்ளார். அஃப்ரிடியின் வலது முழங்கால் தசைநார் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவக் குழுவால் 4-6 வாரங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்ட பின்னர், வரவிருக்கும் ஆசியக் கோப்பையில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த மாதம் காலேயில் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பீல்டிங் செய்யும்போது காயம் ஏற்பட்டது.  

22 வயதான ஹஸ்னைன், 2019 ஆம் ஆண்டில் அறிமுகமான பிறகு எட்டு ஒருநாள் மற்றும் 18 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி உள்ளார்.  மேலும் 29 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் கடந்த டிசம்பர் 2021 முதல் டி20 போட்டிகளில் விளையாடவில்லை, ஹஸ்னைன் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பாகிஸ்தானின் சொந்த டி20 ஐ தொடரில் பங்கேற்றார்.  ஹஸ்னைன் தற்போது இங்கிலாந்தில் ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணிக்காக தி ஹன்ட்ரடில் விளையாடி வருகிறார்.  "ஆசிப் அலி, ஹைதர் அலி, இப்திகார் அகமது மற்றும் உஸ்மான் காதர் ஆகியோர் துபாய்க்கு புறப்படுவார்கள்" என்று பிசிபி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. நெதர்லாந்துக்கு எதிரான 16 பேர் கொண்ட ஒருநாள் அணியில் இடம் பெற்றிருந்த அப்துல்லா ஷபீக், இமாம் உல் ஹக், முகமது ஹரிஸ், சல்மான் அலி ஆகா மற்றும் ஜாஹித் மெஹ்மூத் ஆகியோருக்குப் பதிலாக அவர்கள் இடம் பெறுவார்கள்.

afridi

மேலும் படிக்க | கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் போர் எப்போது ஆரம்பித்தது தெரியுமா?

பாகிஸ்தான் தனது ஆசியக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் ஆகஸ்ட் 28 அன்று துபாயில் இந்தியாவை எதிர்கொள்கிறது, அதே நேரத்தில் அவர்களின் இரண்டாவது ஆட்டம் செப்டம்பர் 2 ஆம் தேதி ஆசியக் கோப்பை தகுதிச் சுற்று வெற்றியாளரை எதிர்கொள்கிறது. சூப்பர் ஃபோர் ஆட்டங்கள் செப்டம்பர் 3 முதல் 9 வரை நடைபெறும், இறுதிப் போட்டி செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறும்.

பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (C), ஷதாப் கான் (VC) ஆசிப் அலி, ஃபகார் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ரவூப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் தசீம் ஷாஹி, நசீம் ஷாஹி, , உஸ்மான் காதர்

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்

மேலும் படிக்க | ஆசியக்கோப்பை 2022; சச்சினின் சாதனையை முறியடிக்கப்போகும் ரோகித்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News