CSK IPL 2023: ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த சீசனில் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) சிறப்பாக விளையாடவில்லை. 14 லீக் ஆட்டங்களில் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற முடிந்தது மற்றும் புள்ளிகள் அட்டவணையில் இறுதி இடத்தில் இருந்தது. 
ஜடேஜா கேப்டனாக தொடங்கிய இந்த சீசனில் இறுதியில் தோனி கேப்டனாக செயல்பட்டார்.  இருப்பினும், 2023 ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ், கைல் ஜேமிசன் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோரை ஏலத்தில் எடுத்து உள்ளது.  மேலும், தீபக் சாஹர்  வரவிருக்கும் சீசனில் விளையாட உள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | சூர்யகுமாருக்காக பிசிசிஐக்கு தலைவலியை உண்டாக்கிய காம்பீர்..!


ஐபிஎல் 2023 முழுவதும் பெஞ்ச்சில் உட்கார போகும் 5 சிஎஸ்கே வீரர்கள்:


1. ஷேக் ரஷீத்


ஆந்திராவை சேர்ந்த ஷேக் ரஷீத் U-19 உலகக் கோப்பை 2022ல் இந்தியாவுக்காக சிறப்பாக செயல்பட்டார். ரஷீத் கோல்ட்ஸ் இன் ப்ளூ அணிக்காக நான்கு இன்னிங்ஸ்களில் 50.25 சராசரியில் இரண்டு அரைசதங்களுடன் 201 ரன்கள் எடுத்தார். 18 வயதான அவர் இறுதிப் போட்டியில் 50 ரன்கள் எடுத்தார். இருப்பினும், உள்நாட்டு கிரிக்கெட்டில் அவரது ஃபார்மைப் பொறுத்தவரை 10 முதல் தர இன்னிங்ஸில் ரஷீத் 211 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஐபிஎல் 2023 ஏலத்தில் ரஷீத்தை அவரது அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு சிஎஸ்கே வாங்கியது. மூன்றாவது இடத்திற்கான வாய்ப்பில் இளம் வீரரை விட ரஹானேவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


2. பகத் வர்மா


ஐபிஎல் 2022 ஏலத்தில் முதலில் கணுமுரி பகத் வர்மாவை சிஎஸ்கே வாங்கியது. இருப்பினும், அவர் எந்த ஆட்டத்திலும் விளையாட முடியவில்லை. பின்னர், ஐபிஎல் 2023 ஏலத்திற்கு முன்னதாக அணியின் பட்டியலிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.  இருந்தபோதிலும், சென்னைஅணி அவரை அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு ஏலத்தில் திரும்ப வாங்கியது. 24 வயதான அவர் சையத் முஷ்டாக் அலி டிராபி 2022ல் ஹைதராபாத் அணிக்காக டி20 அறிமுகமானார்.  ஐந்து T20 ஆட்டங்களில், பகத் 32 சராசரியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்


3. சுப்ரான்ஷு சேனாபதி


சுப்ரான்ஷு சேனாபதி, ஒடிசா அணியின் கேப்டனாக உள்ளார். சேனாபதி 21 அரைசதங்கள் மற்றும் ஏழு சதங்களுடன் அனைத்து வடிவங்களிலும் சராசரியாக 30+ ரன்களை வைத்துள்ளார்.  குறிப்பாக, 30 டி20 இன்னிங்ஸ்களில் 30.25 சராசரியில் நான்கு அரைசதங்களுடன் 817 ரன்கள் குவித்துள்ளார். இருப்பினும், கடந்த சீசனைப் போலவே, CSK XIல் இடம் இல்லாமல் போகலாம். மிடில் ஆர்டரில் பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, மொயீன் அலி போன்ற அனுபவமிக்க கிரிக்கெட் வீரர்கள் இருப்பது இதற்குக் காரணம்.


4. அஜய் மண்டல்


2016 முதல் சத்தீஸ்கரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அஜய் மண்டல் அனைத்து வடிவங்களிலும் அணிக்கு முக்கிய வீரராக இருந்து வருகிறார். இதுவரை, அஜய் 26 முதல் தர போட்டிகளில் 1,211 ரன்கள் மற்றும் 96 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இருப்பினும், T20 வடிவத்தில் 34 போட்டிகளில் 246 ரன்கள் மற்றும் 28 விக்கெட்டுகளுடன் சராசரியாக இருந்தார்.  தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபியில் சத்தீஸ்கர் அணிக்காக அதிக விக்கெட்டுகளை (24) வீழ்த்தியதன் காரணமாக அஜய் அவரது அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு CSKல் வாங்கப்பட்டார். 


5. நிஷாந்த் சிந்து


நிஷாந்த் சிந்து U19-ல் ஐந்து ஆட்டங்களில் 140 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷேக் ரஷீத்துடன் இணைந்து இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்து இந்தியா ஐந்தாவது பட்டத்தை வெல்ல வழி வகுத்தார்.  மேலும் ஒன்பது போட்டிகளில் 669 ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவர் எட்டு டி20 போட்டிகளில் 90 ரன்கள் மற்றும் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.  நிஷாந்தை 60 லட்சத்திற்கு சென்னை வாங்கியது. மூத்த சுழற்பந்து வீச்சாளர்களான ஜடேஜா, மொயீன் மற்றும் மகேஷ் தீக்ஷனா ஆகியோர் உள்ளதால் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது.


மேலும் படிக்க | சூர்யகுமார் யாதவ் ஏன் இத்தனை சாதனைகளை முறியடிக்கிறார் என்று தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ