IPL 2024: இந்தியன் பிரீமியர் லீக் 2024 சீசனுக்கான அட்டவனை சமீபத்தில் வெளியானது. மார்ச் 22ம் தேதி நடைபெறும் இந்த லீக்கின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய அணிகள் பங்கேற்கிறது.  சென்னை நடைபெற உள்ள போட்டிக்கு இப்போது இருந்தே எதிர்பார்ப்புகள் பெருகி உள்ளது. இந்த ஆண்டுடன் தோனி ஓய்வை அறிவிக்க உள்ள நிலையில், இந்த வருட ஐபிஎல்க்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.  இந்நிலையில், நியூசிலாந்து அணியை சேர்ந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் காயம் அடைந்துள்ளதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் இளம் சூப்பர் ஸ்டாராக மாறிய ரச்சின் ரவீந்திரா முழங்கால் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IPL 2024 Tickets: ஐபிஎல் டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்வது எப்படி? எப்போது புக் செய்யலாம்?


ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெலிங்டனில் நடந்த முதல் டி20 போட்டியின் போது இடது முழங்காலில் வலி ஏற்பட்டுள்ளது.  இதனால் இரண்டாவது டி20 போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இருந்து ரவீந்திரரா விடுவிக்கப்பட்டார். ஒருவேளை காயத்தின் அளவு பெரியதாக இருப்பின் ஐபிஎல் 2024ல் அவர் பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.  இந்த ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் விளையாட உள்ள ரச்சின் சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளார்.  பெரிய காயம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று ரசிகர்களும், சென்னை அணியின் நிர்வாகவும் வேண்டி வருகிறது.  இருப்பினும், ரச்சின் இல்லை சென்றால் ஆதிக்கு குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தும். 


கடந்த ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ 1.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் ரவீந்திரா. கடந்த 2023 உலகக் கோப்பையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறந்து விளங்கினார். இவரை போலவே, கடந்த சில சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்து வரும் டெவோன் கான்வேயும் காயத்தால் அவதி பட்டுள்ளார்.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியின் போது கான்வேக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இவரது காயமும் சரியாக வில்லை என்றால் மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024ன் முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகமே. 


கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணி இந்த முறையும் கோப்பையை வெல்ல தீவிரமாக உள்ளது.  காரணம் இந்த ஆண்டுடன் தோனி ஓய்வு பெற உள்ளதால் 2024 ஐபிஎல் சென்னை அணிக்கு முக்கியமானது.  இரண்டு முக்கிய வெளிநாட்டு வீரர்களின் காயம் சென்னைய அணியின் நிர்வாகத்திற்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.  எனினும், ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்க இன்னும் ஒரு மாதம் இருப்பதால் இருவரும் குணமடைந்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.  அதே போல மிடில் ஆர்டரில் கலக்கி வரும் சிவம் துபேவும் தற்போது காயத்தில் உள்ளார். ரஞ்சி கோப்பை போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.  இப்படி சென்னை அணியின் வீரர்களுக்கு அடுத்தடுத்து காயம் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.



மேலும் படிக்க | 'சேப்பாக்கம் இப்போது சிஎஸ்கேவின் கோட்டை இல்லை...' முன்னாள் சென்னை வீரர் - காரணம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ