SRH vs RCB: சன்ரைசர்ஸ் அணியின் விஸ்பரூபத்துக்கு விடை கொடுக்குமா ஆர்சிபி?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதும் நிலையில், இரு அணிகளுக்குமான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்வோம்.,
SRH vs RCB மேட்ச், ஐபிஎல் 2024: ஐபிஎல் 2024 இன் 41வது போட்டி இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் இரு அணிகளும் ஐபிஎல் புள்ளி அட்டவணையில் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளும். ஆர்சிபி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. RCB (Royal Challengers Bengaluru) தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அதேசமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கடைசி நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய போட்டியில் சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
போட்டி எப்போது நடக்கும்?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்இடையிலான இந்த ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் இரவு 7 மணிக்கு போடப்பட உள்ளது.
ஹைதராபாத் ஆடுகளம் எப்படி இருக்கும்?
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தின் ஆடுகளம் (SRH vs RCB பிட்ச் ரிப்போர்ட்) பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமாக கருதப்படுகிறது. இந்த மைதானத்தில் பவுண்டரிகள், சிக்சர்கள் மழை பொழியலாம். பிட்ச் சிறியதாக இருப்பதே இதற்குக் காரணம். இந்த சீசனில் ஹைதராபாத் அணி இந்த மைதானத்தில் 277 ரன்கள் குவித்துள்ளது. இதனால் இன்றைய போட்டியிலும் அதிக ரன்கள் குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தின் சாதனை
ஹைதராபாத்தில் உள்ள இந்த மைதானத்தில் இதுவரை மொத்தம் 73 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 32 ஆட்டங்களிலும், பின்னர் பேட்டிங் செய்த அணி 41 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் ஒரு சுவாரசியமான புள்ளி விவரம் என்னவென்றால், டாஸ் தோற்ற அணி தான் அதிக போட்டிகளில் வென்றுள்ளது. இந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில், டாஸ் இழந்த அணி 47 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், டாஸ் வென்ற அந்த அணி 26 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இங்கு அதிகபட்ச ஸ்கோர் 277. நடப்பு ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடித்தது. குறைந்த ஸ்கோர் 80 டெல்லி கேபிடல்ஸ் அடித்த ஸ்கோர் ஆகும்.
புள்ளி பட்டியலில் இரு அணிகளின் நிலை என்ன?
புள்ளிகள் பட்டியலில் ஹைதராபாத் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆர்சிபிக்கு இந்த சீசன் சிறப்பாக அமையவில்லை. அந்த அணி தொடர்ந்து போட்டிகளில் தோல்வியை சந்தித்து வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 1ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, 7ல் தோல்வியை சந்தித்துள்ளது. ஆர்சிபி அணி 2 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில், அதாவது பத்தாவது இடத்தில் உள்ளது.
SRH Vs RCB ஹெட் டு ஹெட்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB vs SRH ஹெட் டு ஹெட்) இடையே இதுவரை 24 போட்டிகள் நடந்துள்ளன. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 13 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சமீபத்தில் நடந்த கடைசி போட்டியில், ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி RCBக்கு எதிராக (RCB vs SRH) 287 ரன்கள் குவித்தது. அதேசமயம் SRHக்கு எதிராக பெங்களூருவின் அதிகபட்ச ஸ்கோர் 262 ஆகும்.
இரு அணிகளிலும் பிளேயிங் லெவன்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், நிதிஷ் குமார் ரெட்டி, ஷாபாஸ் அகமது, அப்துல் சமத், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், கர்ண் ஷர்மா, முகமது சிராஜ், லாக்கி பெர்குசன், யாஷ் தயாள்.
மேலும் படிக்க | கடைசி பந்து வரை த்ரில்... மாஸாக வென்றது டெல்லி கேப்பிடல்ஸ் - நொந்து போன குஜராத்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ