IPL 2024 குவாலிபையர் 1, KKR vs SRH: IPL இன் குவாலிபையர்-1 போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே இன்று இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியும் மழை அச்சுறுத்தல் குறைவாக இருக்கிறது. ஐபிஎல் 2024ல் இதுவரை 3 போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிகளுக்கு இடையிலான குவாலிபையர்-1 ஆட்டத்தில் மழை பெய்தால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். கடந்த ஐபிஎல் சீசனில், இறுதிப் போட்டிக்கு மட்டுமே ரிசர்வ் டே வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சீசனில் நான்கு ஐபிஎல் பிளேஆஃப் போட்டிகளுக்கும் ரிசர்வ் டே உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IPL 2024 Qualifier 1: கேகேஆர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி இதுதான்!


குவாலிஃபையர்-1 மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?


Accuweather.com படி, மே 21 ஆம் தேதி அகமதாபாத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) இடையேயான குவாலிஃபையர்-1 போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு குறைவு என கூறப்பட்டுள்ளது. இன்று அகமதாபாத்தில் வெயிலுடன் இதமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இரண்டாவது இன்னிங்ஸில் பனி முக்கிய பங்கு வகிக்கும். போட்டியின் போது மழை பெய்தால் ஓவர்கள் குறைக்கப்படலாம். கனமழை பெய்தால், போட்டியை தலா 5 ஓவர்கள் கொண்டதாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். இதுவும் முடியாவிட்டால் ரிசர்வ் நாளில் போட்டி நடைபெறும். ரிசர்வ் நாளில், மழை காரணமாக முந்தைய நாள் விடப்பட்ட இடத்திலிருந்து போட்டி தொடங்கும்.


KKR இறுதிப் போட்டிக்கான டிக்கெட் கிடைக்குமா?


ரிசர்வ் நாள் மழையால் கைவிடப்பட்டால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஏனெனில் லீக் கட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி 14 ஆட்டங்களில் 20 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி 14 போட்டிகளில் 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. விதிகளின்படி, புள்ளிகள் பட்டியலில் சிறந்த நிலையில் இருப்பதால், போட்டி ரத்து செய்யப்பட்டால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டைப் பெறும்.


KKR மற்றும் SRH இடையே கடும் போட்டி 


ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ஹெச்) இடையே 26 போட்டிகள் நடந்துள்ளன. இந்த 26 ஆட்டங்களில் கொல்கத்தா 17 ஆட்டங்களிலும், ஹைதராபாத் 9 ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்துள்ளன. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் பிளேஆஃப் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிகளுக்கு இடையே 2 எலிமினேட்டர் போட்டிகள் நடந்துள்ளன. இதில், ஒரு போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் (SRH) ஒரு போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியும் வெற்றி பெற்றன. 2018 ஆம் ஆண்டில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) குவாலிஃபையர்-2 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸை (KKR) தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. ஒட்டுமொத்தமாக, பிளேஆஃப் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை (கேகேஆர்) விட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) முன்னிலை பெற்றுள்ளது. இருப்பினும் இன்றைய போட்டி என்பது சவாலாகவே இருக்கும்.


மேலும் படிக்க | விராட் கோலியை இந்திய அணிக்குள் கொண்டு வந்தது சிஎஸ்கே வீரரா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ