சாஹர்க்கு 14 கோடி, தோனிக்கு 12 கோடி - ஐபிஎல் சுவாரசியங்கள்!
ஐபிஎல் மெகா ஏலத்தில் சில வீரர்கள் யாரும் எதிர்பார்க்காத விலைக்கு சென்றுள்ளனர்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் தக்கவைப்பு விதிமுறை தோனி மற்றும் ஜஸ்பிரித் பும்ராவை விட தீபக் சாஹர், இஷான் கிஷான் ஆகியோரை பண அடிப்படையில் அதிக மதிப்புடைய வீரர்களாக மாற்றியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே தோனி மற்றும் பும்ராவை தலா ரூ.12 கோடிக்கு தக்கவைத்துள்ளன. சிஎஸ்கே சாஹரை ரூ.14 கோடிக்கு வாங்கியபோது, மும்பை கிஷனுக்கு ரூ.15.25 கோடியை ஒதுக்கியது. இதற்கிடையில், ஹர்ஷல் படேலை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ. 10.75 கோடிக்கு வாங்கியது. ஆனால் முகமது சிராஜை ரூ. 7 கோடிக்கு தக்கவைத்தது.
மேலும் படிக்க | ஐபிஎல் 2022: 10 அணியின் புதிய கேப்டன்கள்!
தோனியை விட சாஹர் விலை உயர்ந்தது எப்படி?
2018 ஆம் ஆண்டில், சாஹரை 80 லட்ச ரூபாய்க்கு சிஎஸ்கே வாங்கியது. நான்கு ஆண்டுகளில் ஏறக்குறைய 18 மடங்கு சம்பள உயர்வு சாஹருக்கு ஏற்பட்டுள்ளது. பவர்பிளே சிறந்த பவுலராக சாஹர் இருந்து வருகிறார். நவீன கிரிக்கெட்டில் பல இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் செய்யாத சிறப்பான பவுலிகை அவர் செய்கிறார். அவரது பேட்டிங் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. சி.எஸ்.கே ஒரு பேட்ஸ்மேன் அல்லது பவுலரை விட ஆல்ரவுண்டரை அதிகம் எதிர்பார்க்கிறது. அந்த வகையில் தோனியை விட சாஹர் அதிக சம்பளம் பெறுகிறார்.
பும்ராவை விட இஷான் கிஷனுக்கு அதிக சம்பளம்?
மும்பை அணி அவர்களின் விக்கெட் கீப்பர்களான கிஷன் மற்றும் குயின்டன் டி காக் இருவரையும் தக்கவைக்காவல் விடுவித்தது. அவர்களில் ஒருவர் மும்பை அணிக்கு மீண்டும் தேவை பட்டார். வெளிநாட்டு வீரரை விட உள்ளூர் வீரருக்கு மும்பை அதிக முக்கியத்துவம் கொடுத்தது. ஒவ்வொரு அணிக்கும் ஒரு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தேவை. அதனால்தான் தினேஷ் கார்த்திகை RCB ரூ 5.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்து.
சிராஜை விட ஹர்ஷல் படேல் சிறந்த பந்து வீச்சாளரா?
ஐபிஎல் ஏலத்தில் கிரிக்கெட் லாஜிக் எப்போதும் வேலை செய்யாது. சிராஜ் தற்போது சிறந்த பந்துவீச்சாளராக இந்திய அணியில் இருந்து வருகிறார். படேல் டி20 மட்டுமே விளையாடியுள்ளார், இருப்பினும் அவர் கடந்த ஆண்டு ஐபிஎல்லில் 32 விக்கெட்டுகளுடன் பர்பிள் கேப் ஹோல்டராக இருந்தார். இதனால் ஏலத்தில் அதிக விலைக்கு சென்றார்.
அன்சோல்ட ஆனா ரெய்னா, ஸ்மித்!
சுரேஷ் ரெய்னா 205 ஐபிஎல் போட்டிகளில் 5528 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் ஏலத்தில் எந்த அணியும் அவரை எடுக்கவில்லை. இருவருக்குமே வயது மூப்பு ஏற்பட்டுள்ளதால் அணிகள் இவர்களை ஏலம் எடுப்பதில் சுணக்கம் காட்டினார்.
மேலும் படிக்க | ஐபிஎல் 2022-ல் க்ளென் மேக்ஸ்வெல் விளையாடுவது சந்தேகம்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR