இந்தியன் பிரீமியர் லீக் உலகின் மிகவும் லாபகரமான டி20 கிரிக்கெட் லீக்காக மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள அனைத்து கிரிக்கெட் அமைப்புகளுக்கும் முன்னோடியாக இது திகழ்கிறது. உண்மையில், பல வீரர்கள் 2-மாதம் ஐபிஎல்-ல் விளையாடுவதற்காக இன்டர்நேஷனல் போட்டிகளை கூட தவறவிடுகிறார்கள். நட்சத்திர அந்தஸ்து வீரர்களை ஒரே அணியில் விளையாட வைக்கும் இந்த ஐபிஎல்-லை அதிக மக்கள் பார்ப்பதை தாண்டி, வீரர்களை விளையாட வைப்பது பணம் தான். ஐபிஎல் 2022 மெகா ஏலம் இன்று தொடங்கவுள்ள நிலையில், பிக் பாஷ் லீக் (பிபிஎல்), பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) போன்ற உலகெங்கிலும் உள்ள மற்ற டி20 லீக்குகளுடன் ஒப்பிடுகையில் இந்திய டி20 லீக் வழங்கும் சம்பளம் மிகவும் அதிகம்.
மேலும் படிக்க | மும்பை கேப்டனாக விரும்பினாரா ஹர்திக் பாண்டியா?
ஐபிஎல் தவிர டி20 லீக்களில் அதிக சம்பளம்:
BBLல் ஒரு வீரருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த சம்பளம் என்று வரும்போது, ஹோபார்ட் ஹரிகேன்ஸின் டி'ஆர்சி ஷார்ட் USD 258,000 பெறுகிறார், அதாவது தோராயமாக INR 1.9 கோடி.
PSLல், பிளாட்டினம் பிரிவில் அதிகபட்சமாக USD 170,000 சம்பாதிக்கும் பல வீரர்கள் உள்ளனர். இது சுமார் 1.27 கோடி ரூபாய். பாபர் அசாம், கீரன் பொல்லார்ட் போன்ற வீரர்கள் இந்த பிரிவில் உள்ளனர்.
பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள சிபிஎல், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 112,000 அமெரிக்க டாலர்கள் பெற்று அதிக சம்பளத்தில் உள்ளவர்களில் ஒருவராக உள்ளார். இந்த தொகை தோராயமாக இந்திய மதிப்பில் 85 லட்சம்.
விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில் 17 கோடி ரூபாய் சம்பளத்துடன் மிகப்பெரிய பேக்கேஜ் கொண்ட வீரராக இருந்தார். இருப்பினும், தற்போது ஐபிஎல் 2022 ஏலத்திற்கு முன்னதாக, கோஹ்லி தனது சம்பளத்தை 15 கோடி ரூபாயாகக் குறைத்தார், அதே நேரத்தில் கேஎல் ராகுல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸால் 17 கோடி ரூபாய்க்கு சேர்க்கப்பட்டார், இதனால் ஏலத்திற்கு முன்னதாக ராகுல் மிகவும் மதிப்பு மிக்க வீரராக உள்ளார்.
இந்த முறை மெகா ஏலத்தில் ஐபிஎல்-லில் உள்ள 10 உரிமையாளர்களுக்கு தலா 90 கோடி ரூபாய் பர்ஸ் பேலன்ஸ் வழங்கப்பட்ட நிலையில், 2-நாள் ஏல நிகழ்வில் 561.5 கோடி செலவழித்து அதிகபட்சமாக 217 வீரர்களை வாங்கலாம், ஒவ்வொரு அணிக்கும் 25 வீரர்கள் வரை அணியில் எடுத்து கொள்ளலாம். ரூ. 561.5 கோடியை 217 ஆகா பிரித்தால், ஒவ்வொரு வீரருக்கும் சுமார் 2.58 கோடி கிடைக்கும். பிக் பாஷ் லீக்கில் அதிக வருமானம் ஈட்டும் வீரர் பெறுவதை விட இந்தத் தொகை அதிகம், மேலும் இது பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் கரீபியன் பிரீமியர் லீக்கில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்களின் தொகையை விட அதிகம். ரஷித் கான் தற்போது CPLல் வெறும் INR 85 லட்சம் சம்பாதிக்கிறார், ஆனால் IPL 2022 சீசனில் INR 15 கோடி வரை பெற்றுள்ளார்.
மேலும் படிக்க | மும்பை இண்டியன்ஸ் Target செய்யப்போகும் வீரர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR