நியூடெல்லி: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிக டக் அடித்த கிரிக்கெட்டர்களின் பட்டியலில் இணைந்தார். ஐபிஎல் வரலாற்றில் மன்தீப் சிங், சுனில் நரைன் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் 15 டக்களுடன் முதல் இடத்தில் உள்ளனர். இந்தப் பட்டியலில் ரோஹித் ஷர்மாவும் தற்போது இணைந்துவிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கிய போட்டியில், ரோஹித் ஷர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார், பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் முழு ஒதுக்கீட்டை வீசாமல் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த தேவையற்ற சாதனையை படைத்தார்.


இதுபோன்ற பல சங்கடமான சாதனைகளை பல கிரிக்கெட்டர்கள் ஐபிஎல் போட்டிகளில் செய்துள்ளனர். இவை சங்கடமான சாதனைகள். இந்தப் பட்டியலில் இடம் பெற யாரும் விரும்ப மாட்டார்கள்.  


மேலும் படிக்க | உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள்! டாப் 5 ஸ்போர்ட்ஸ்மென்


அர்ஷ்தீப் சிங்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், டி20 போட்டியில் 4 ஓவர்கள் வீசாமல் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து சாதனை படைத்துள்ளார். அர்ஷ்தீப் 3.5 ஓவர்களில் 66 ரன்கள் கொடுத்தார், 2018 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் 3.1 ஓவரில் 64 ரன்களை விட்டுக்கொடுத்த நியூசிலாந்தின் பென் வீலரின் சாதனையை அவர் முறியடித்தார். 


ரோஹித் சர்மா அதிக ஆட்டமிழந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தனது 15வது முறையாக டக் அவுட் ஆனார். ரன்களே எடுக்காமல் ஆட்டமிழந்தவர் என்ற சாதனையை செய்து, தினேஷ் கார்த்திக் மற்றும் சுனில் நரைன் என அதிக டக் அவுட் பட்டியலில் ரோஹித் ஷர்மா இடம் பிடித்துவிட்டார்.



கௌதம் கம்பீரின் ஹாட்ரிக் டக்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டருமான ஆஷ்டன் டர்னர், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மூன்று முறை ஆட்டமிழந்து சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் 2014 இல் கம்பீரின் ஹாட்ரிக் டக் ஆனார். அவரது சாதனையை ஐபிஎல் 2019இல் ஆஷ்டன் டர்னர் சமன் செய்தார்.  


மேலும் படிக்க | விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கும் பி.டி உஷா! முதலில் நான் ஒரு வீராங்கனை பிறகே நிர்வாகி


ஐபிஎல் 2017ல் RCB 49 ரன்களுக்கு ஆல் அவுட்
ஐபிஎல் 2017ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 49 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. விராட் கோலி தலைமையிலான அணி 9 ரன்களுக்கு கடைசி 6 விக்கெட்டுகளை இழந்தது.  


டெக்கான் சார்ஜர்ஸ் அதிக எண்ணிக்கையிலான அதிக எக்ஸ்ட்ராக்களை கொடுத்தது 
டெக்கான் சார்ஜர்ஸ் (இப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) ஐபிஎல் 2008 போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது அதிக எக்ஸ்ட்ரா ரன்களை விட்டுக்கொடுத்தது. 20 ஓவர் போட்டியில் 28 ரன்கள் விட்டுக் கொடுத்த சாதனையை வேறு எந்த அணியும் இதுவரை செய்யவில்லை.  


புனே வாரியர்ஸ் இந்தியாவின் தொடர் தோல்விகள்
புனே வாரியர்ஸ் இந்தியா ஐபிஎல் 2013 இல் தொடர்ச்சியாக 11 தோல்விகளைப் பதிவுசெய்தது, இதுவரை, ஐபிஎல் வரலாற்றில் எந்த அணியும் இந்த அளவுக்கு தொடர் தோல்விகளை சந்தித்ததில்லை.


லும் படிக்க  | ஐபிஎல் 2023-ல் இருந்து கே.எல் ராகுல் விலகல்? பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ