Punjab Kings vs Mumbai Indians: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய இரண்டாவது போட்டி பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது.
பிபிகேஎஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணியில் கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் 75 ரன்கள் எடுத்திருந்தார். அவர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Match 46. Mumbai Indians Won by 6 Wicket(s) https://t.co/QDEf6eqX22 #TATAIPL #PBKSvMI #IPL2023
— IndianPremierLeague (@IPL) May 3, 2023
புதன்கிழமை மொஹாலி பிசிஏ ஸ்டேடியத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இன் 46வது போட்டி நடைபெற்றது.ஷிகர் தவானின் பிபிகேஎஸ் ஏற்கனவே ஐபிஎல் 2023 இல் மும்பை அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்த நிலையில், இன்று அதற்கு மும்பை அணி பழிவாங்கிவிட்டது.
சொந்த மண்ணில் அடைந்த தோல்விக்கு மும்பை அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,எதிர்பார்ப்பை மும்பை அணி நிறைவேற்றியது.
பஞ்சாப் அணி சார்பாக பிரப்சிம்ரன் சிங் - தவான் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஆட்டத்தை அதிரடியாக தொடங்கியது.பஞ்சாப் அணி சார்பாக பிரப்சிம்ரன் சிங் - தவான் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் 82 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 27 பந்துகளில் 49 ரன்களும் விளாசினார்.
அடுத்து களமிறங்கிய மும்பை அணி, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இஷான் கிஷான் 41 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து அசத்தினார்.
தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் 66 ரன்களும், கேரமரன் கிரீன் 23 ரன்களும் எடுத்தனர். திம் டேவிட் 19 ரன்களுடன், திலக் வர்மா 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடினர். ஆட்டத்தின் முடிவில் 18.5 ஓவரில் 216 ரன்கள் எடுத்து மும்பை அணி வென்றது..
மேலும் படிக்க | ஐபிஎல் 2023-ல் இருந்து கே.எல் ராகுல் விலகல்? பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ