லக்னோ அணியை வீழ்த்த CSK அணிக்குள் என்டிரியாகும் புதிய வீரர் - தோனியின் மாஸ் பிளான்
முதல் போட்டியில் தோல்வியை தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோவை வீழ்த்த புதிய வீரரை பிளேயிங் லெவனில் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இரவு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் தோல்வியை தழுவிய சென்னை அணி, இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியை வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இதனால், அந்த அணி ஆடும் லெவனில் புதிய வீரரை களமிறக்க திட்டமிட்டுள்ளது. கேப்டனாக தோனி இல்லாதபோதும், ஆலோசனையாக இந்த வீரரை ஆடும் லெவனில் சேர்க்க அறிவுறுத்தியுள்ளாராம்.
மேலும் படிக்க | தோனியின் இந்த முடிவால் நொறுங்கிப்போனேன் - வருந்தும் சிஎஸ்கே வீரர் Video
யார் அந்த வீரர்?
சென்னை அணியில் ஆடும் லெவனில் சேர்க்க தோனி சிபாரிசு செய்யுமளவுக்கு திறமையான வீரர் யாராக இருக்கும்? என நீங்கள் நினைக்கலாம். அவர் வேறு யாருமல்ல கடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் தூணாக இருந்த மொயீன் அலி தான். ஆல்ரவுண்டரான இவர், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். கடந்த ஆண்டு சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றபோது, பல போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
ஆடும் XI-ல் வாய்ப்பு கிடைக்குமா?
வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய மொயீன் அலி, குவாரன்டைனில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அவரின் குவாரன்டைன் காலம் முடிவடைந்திருப்பதால், நேரடியாக சென்னை அணியுடன் இணைந்திருக்கும் அவர், லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணியுடனான இன்றைய போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விசா உள்ளிட்ட காரணங்களால் மொயீன் அலி இந்தியா திரும்புவதற்கு பிரச்சனை இருந்தது. அதனால், கேகேஆர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவரால் விளையாடமுடியவில்லை.
மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்
உலகளவில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக இருக்கிறார் மொயீன் அலி. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஜொலிப்பதால் அவர் மீது சென்னை அணி மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. அதன் ஒருபகுதியாக தான் வீரர்கள் ரீட்டெயின் பட்டியலில் மொயீன் அலியை சென்னை அணி தக்கவைத்ததும். இன்றைய போட்டியில் அவர் மீது சென்னை வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஏற்ப மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு தயாராகும் 42 வயது ஜாம்பவான்?
பிளேயிங் 11
ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, மொயின் அலி, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), சிவம் துபே, எம்எஸ் தோனி, டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, துஷார் தேஷ்பாண்டே.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR