10 அணிகள் பங்கேற்றிருக்கும் இந்த ஐபிஎல் போட்டியில் தோனியும், விராட் கோலியும் முதன்முறையாக வீரர்களாக விளையாடுகின்றனர். இருவரும் இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக தங்களது அணியின் கேப்டன் பதவிகளில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தனர். குறிப்பாக, தோனி ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு இந்த அறிவிப்பை வெளியிட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தார்.
தோனியின் முடிவுக்கு வருத்தம்
இந்த ஐபிஎல் போட்டியில் முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளார் நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வோய். தோனியின் மிகப்பெரிய ரசிகரான இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வானதும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்துள்ளார். அதுவும் தோனி தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடப்போகிறோம் என நினைத்துள்ளார். தோனி கேப்டன்சியின் கீழ் விளையாடுவது என்பது தன்னுடைய கனவு எனத் தெரிவித்துள்ள அவர், அந்த ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கையில் இருந்ததாக கூறியுள்ளார். ஆனால் கடைசி நேரத்தில் தோனி எடுத்த முடிவு தன்னுடைய இதயத்தை நொறுக்கியதாக குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு தயாராகும் 42 வயது ஜாம்பவான்?
தோனி சாதனை
ஐபிஎல் 2022-ன் முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய தோனி ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்தார். கிட்டதட்ட 28 இன்னிங்ஸ் மற்றும் 3 சீசன்களுக்கு பிறகு அடித்த முதல் அரை சதம். இறுதிவரை களத்தில் இருந்த அவர் 38 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார். 40 வயது 262 நாட்களில் இந்த அரை சதத்தை தோனி அடித்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல்லில் அரைசதம் அடித்த மூன்றாவது வயதான வீரர் என்ற பெருமையையும் அவருக்கு கிடைத்துள்ளது.
Thoughts on Thala ft. Conway!#WhistlePodu #Yellove pic.twitter.com/P6E68s3oXN
— Chennai Super Kings (@ChennaiIPL) March 29, 2022
சிஎஸ்கே தோல்வி
இப்போட்டியில் கேகேஆர் 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கேயை வீழ்த்தியது. தோனியைத் தவிர, CSK அணியில் மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய இன்னிங்ஸை விளையாடவில்லை. 132 ரன்கள் நோக்கி விளையாடிய KKR, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
மேலும் படிக்க | RCBvsKKR:கோலியின் கோப்பை கனவை தகர்த்த கொல்கத்தா - பழிவாங்க காத்திருக்கும் ஆர்சிபி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR