கிரிக்கெட் லீக் தொடரின் மிகப்பெரிய லீக்காக உள்ள ஐபிஎல் 2022 மெகா ஏலம் நிறைவடைந்துள்ளது. 2 நாட்கள் பெங்களூரில் நடைபெற்ற இந்த ஏலத்தில் சர்வதேச வீரர்கள் முதல் இளம் வீரர்கள் வரை 10 அணிகளால் வாங்கப்பட்டனர். புதுமுகங்கள் வந்திருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் தங்களது அதிரடியால் ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருந்த 3 பேர், இனி எந்த ஐபிஎல் போட்டியிலும் விளையாட மாட்டார்கள். மூவரும் இல்லாத முதல் ஐபிஎல் தொடர் இது. 3 வீர ர்களின் ஐபிஎல் சகாப்தம் முடிவுக்கு வந்திருப்பது ரசிகர்களுக்கும் வருத்ததை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. யுனிவர்ஸ் பாஸ்



வெஸ்ட் இண்டீஸ் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்யவில்லை. 42 வயதான அவர், 2009 ஆம் ஆண்டு முதன் முதலாக ஐபிஎல் போட்டியில் விளையாடத் தொடங்கினார். கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி மற்றும் ஆர்சிபி அணிகளுக்காக விளையாடிய அவர், களத்தில் பந்துவீச்சாளர்களுக்கு தயவு தாட்சண்யம் காட்டாமல் பந்துகளை சிதறடித்தார். இதுவரை 6 சதங்கள், 31 அரைசதங்களை விளாசியுள்ளார். அவர் எடுத்த 175 ரன்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் தனிநபர் அதிகபட்சமாக உலகளவில் உள்ளது. 


மேலும் படிக்க | ஐபிஎல் ஏலத்தை புரட்டிப் போட்ட கிரண்! யார் இவர்!


2. மிஸ்டர் 360



தென்னாப்பிரிக்காவின் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் களமிறங்கி, தொடர்ந்து அனைத்து சீசன்களிலும் பங்கேற்றார். 3 சதங்களை விளாசியுள்ள அவர், 184 போட்டிகளில் 5,162 ரன்கள் எடுத்துள்ளார். கடினமான சூழல்களில் அணியை வெற்றிக் அழைத்துச் செல்வதில் கில்லாடியான அவர், மைதானத்தின் எந்த திசையிலும் பந்தை அடிக்கும் அசாத்திய திறமை கொண்டவராக இருந்தார். அவரின் இந்த ஆட்டத்தை ரசிகர்கள் இனி காண முடியாது.


மேலும் படிக்க | யார் இந்த காவியா மாறன்? SRH உரிமையாளர் பற்றிய கூடுதல் தகவல்கள்!



3. மிஸ்டர் ஐபிஎல் 



மிஸ்டர் ஐபிஎல் என பெயரெடுத்தவர் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் போட்டி வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாட வீரர்கள் பட்டியலில் டாப் 3-ல் இருக்கும் இவரை இந்த ஆண்டு எந்த ஐபிஎல் அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து திடீரென வெளியேறிய அவர், இந்த ஆண்டு ஏதேனும் ஒரு அணியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை எந்த அணியும் எடுக்காததால் சுரேஷ் ரெய்னாவின் ஐபிஎல் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR