புதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக் உரிமையாளர்கள், தாங்கள் தக்க வைத்துக் கொள்ளப்போகும் வீரர்கள் (IPL Retentions) தொடர்பான அறிவிப்பை தக்கவைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அனைத்து அணிகளும் ஏதோ ஒரு விதத்தில் ஆச்சரியத்தைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவம்பர் 30ம் தேதிக்கும் ஐபில் அணிகள் அனைத்தும், தாங்கள் தக்க வைத்துக் கொள்ளப்போகும் வீரர்களை குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என்ற காலக்கெடு இருந்தது.  ஐபிஎல் 2022 சீசனில், ஒரு அணி 4 வீரர்களுக்கு மேல் தக்கவைக்க முடியாது என்பதால் யாரெல்லாம் தக்க வைக்கப்படுகின்றனர் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் உலகில் அதிகமாகவே இருந்தது. 


அதில் ஆச்சரியம் தரும் சில வீரர்கள் தொடர்பான ஐபில் அணிகளின் முடிவுகள், நிலவி வந்த எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருந்தது.



உம்ரான் மாலிக்: ஐபிஎல் சீசனின் இரண்டாம் பாதியின் கடைசி கட்டத்தில்,  அதிவேகப் பந்தை மாலிக் அடித்ததால் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு குறிப்பிடத்தக்க அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தார். மேலும் டி20 உலகக் கோப்பையில் (T20 World Cup) இந்தியாவொம் நெட் பவுலராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இந்தியா ஏ அணியிலும் இடம் பெற்றார். புவனேஷ்வர் குமார், ரஷித் கான் போன்ற நட்சத்திர வீரர்களை விட்டுவிட்டு, உம்ரான் மாலிக்கை தேர்ந்தெடுத்தது SRH நிர்வாகம் கொடுத்த ஆச்சரியமான ரிடென்ஷன் என்பதை யாராலும் மறுக்க முடியாது.


READ ALSO | IPL 2022 Auction: கசிந்தது தகவல்


அப்துல் சமத்: ஹைதராபாத் அணியின் (Sunrisers Hydrabad) மற்றொரு ஆச்சரியமான தேர்வு அப்துல் சமத். வரவிருக்கும் சீசனுக்கான தக்கவைப்பில், பெரிய வீரர்களை பின்னுக்குத் தள்ளி,  முன்னேறிய மற்றொரு காஷ்மீரி அப்துல் சமத்.  


அர்ஷ்தீப் சிங்: பஞ்சாப் கிங்ஸ் 2022 சீசனில் எந்த வீரர்களையும் தக்கவைக்க மாட்டோம் என்று முன்னதாக அறிவித்திருந்தாலும், ஐபில் 2022இல், அர்ஷ்தீப் சிங் மற்றும் மயங்க் அகர்வாலை தக்க வைத்துக் கொள்வதாக அறிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


முகமது சிராஜ்: 2021 ஐபிஎல் சீசனில் முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஷல் படேலை விட்டுவிட்டு, முகமது சிராஜுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது அனைவருக்கும் வியப்பான விஷயமாக உள்ளது. 


ஐபிஎல் 2022 மெகா ஏலம் ஜனவரி-பிப்ரவரியில் நடக்கும். அதில், ரவி அஷ்வின், ஷிகர் தவான், கே.எல்.ராகுல், டேவிட் வார்னர் போன்ற வீரர்கள், ஏற்கனவே இருக்கும் அணியிலேயே தொடர்வார்களா? இல்லை தாங்கள் தற்போது இருக்கும் அணிக்கு எதிராக களமிறங்குவார்களா என்பது அப்போதுதான் தெளிவாகத் தெரியும்.


ALSO READ | என்னை அணியில் சேர்க்க வேண்டாம் - ஹர்திக் பாண்டியா!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR