IPL 2022 Auction: ஐ.பி.எல்.லில் தக்கவைக்கப்படும் வீரர்கள் யார்? கசிந்தது தகவல்

IPL 2022 Retained Players List:ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Written by - ZEE Bureau | Last Updated : Nov 30, 2021, 11:16 AM IST
IPL 2022 Auction: ஐ.பி.எல்.லில் தக்கவைக்கப்படும் வீரர்கள் யார்? கசிந்தது தகவல்

IPL 2022 Retained Players List: இந்தியாவில் ஆண்டுதோறும் டி20 போட்டிகளுக்கான ஐ.பி.எல். தொடர் நடத்தப்பட்டு வருகிறது. டி20 ஐ.பி.எல் போட்டியில் இதுவரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்தனர். அதன்படி தற்போது அடுத்தாண்டு (2022) முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. அதன்படி அண்மையில் நடைபெற்று முடிந்த புதிய அணிகளுக்கான ஏலத்தில் புதிய இரண்டு அணிகள் ஏலத்தில் எடுக்கப்பட்டது.

மேலும், அடுத்த ஐ.பி.எல். (IPL 2022) தொடரில் அனைத்து அணிகளிலும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும், மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தின் (IPL 2022 Auction) மூலமாகவே இடம்பெற முடியும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இருந்தது. இதன் காரணமாக தற்போது அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 30 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது. 

ALSO READ | ஐபிஎல் 2022: சென்னை, டெல்லி, மும்மை, கொல்கத்தா தக்க வைத்து கொண்ட வீரர்கள்!

இந்த நிலையில், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி, ஒவ்வொரு அணிகளும் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் விவரத்தை கீழ் கண்ட வரிசையில் பார்ப்போம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் : எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் அய்யர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : கனே வில்லியம்சன்
மும்பை இந்தியன்ஸ் : ரோகித்சர்மா, ஜஸ்பிரித் பும்ரா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : விராட் கோலி, கிளன் மேக்ஸ்வேல்
டெல்லி தலைநகரங்கள் : ரிஷப்பண்ட், பிரித்விஷா, அக்‌ஷர் படேல், நோர்ட்ஜே
ராஜஸ்தான் ராயல்ஸ் : சஞ்சு சாம்சன்

இவர்களின் பெயர்களையே ஒவ்வொரு அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியல் என்று அளித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது.

சமீபத்தில் ஐபிஎல், 2022 சீசனில் இருந்து 10 அணிகள் லீக்காக இருக்கும், பல்வேறு தக்கவைப்பு அடுக்குகளை அமைக்கும் போது ஒவ்வொரு அணியும் ஐபிஎல் ஏலத்தில் ரூ.90 கோடி செலவு செய்யலாம். 4 வீரர்களை தக்கவைப்பதென்றால், அதற்கு அதிகபட்சமாக ரூ.42 கோடியை ஒதுக்க வேண்டும். ஒரு அணி தக்கவைக்கும் முதல் வீரருக்கு ரூ.16 கோடியும், 2வது வீரருக்கு ரூ.12 கோடியும், 3வது வீரருக்கு ரூ.8 கோடியும், 4வது வீரருக்கு ரூ.6 கோடியும் கொடுக்கவேண்டும்.

ALSO READ | IPL 2022: தல தோனி இன்னும் 3 சீசன்களுக்கு CSKவுக்கு தான்! ஒப்பந்தம் முடிவானது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

More Stories

Trending News