MS Dhoni Latest News Tamil : ஐபிஎல் 2025 தொடருக்காக வீரர்கள் தக்கவைப்பு விதிமுறைகளை அண்மையில் பிசிசிஐ வெளியிட்டது. அதில் சுவாரஸ்யமாக நீக்கப்பட்ட பழைய விதியான அன்கேப்டு பிளேயர் விதிமுறை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன இந்திய வீரர்களை அன்கேப்டு பிளேயர் என கூறி ஒரு ஐபிஎல் அணி தக்க வைத்துக் கொள்ளலாம். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடாத பிளேயர்களுக்கு கொடுக்கப்படும் மிக குறைவான ஊதியத்தை மட்டும் அந்த பிளேயருக்கு அணி நிர்வாகம் கொடுத்தால் போதும். இந்த விதிமுறை இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது? என்ற கேள்வியை பலரும் எழுப்பிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மீண்டும் இந்த ஆண்டு ஐபிஎல்போட்டியில் ஆட வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டிருப்பதாக கூறி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முகமது கைப் பேட்டி


அதற்கு வலு சேர்க்கும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைப், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியிலும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். தோனி ஐபிஎல் போட்டிகளில் ஆடும் வரை அவருக்காக ஐபிஎல் விதிகள் மாற்றப்படும் என கூறியுள்ளார். அவர் பேசும்போது, "தோனி மிகப்பெரிய பிளேயர் என்பதில் சந்தேகமில்லை. அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக பல பட்டங்களை பெற்றுக் கொடுத்திருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. அதற்கு ஏற்ப தோனியும் நல்ல பிட்டாக இருக்கிறார். நன்றாக விளையாடுகிறார். அவரால் களத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் அவருக்காக ஐபிஎல் விதிகள் மாற்றப்பட்டிருக்கிறது என்று சொல்வதில் தவறேதும் இல்லை. தோனிக்கு இன்னும் மிகப்பெரிய வேல்யூ இருக்கிறது" என கூறியுள்ளார்.


மேலும் படிக்க | ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மீண்டும் ஆப்பு... இந்திய அணியில் இடத்தை தட்டிபறிக்கும் மற்றொரு வீரர்...!


தோனிக்காக விதிமுறை மாற்றம்


தொடர்ந்து பேசிய முகமது கைப் " தோனி ஒரு அணிக்கான வீரர். அணி நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறதோ அதனை செய்து கொடுக்க தயாராகவே இருக்கிறார். அதனால் அன்கேப்டு பிளேயராக இந்த ஆண்டு ஐபிஎல் பிளேயர் ரீட்டென்ஷனிலும் அவர் தக்க வைக்கப்படுவார். ஆனால், அதற்காக அவருக்கு 4 கோடி ரூபாய் மட்டும் தான் கிடைக்கும். தொகை அளவில் பார்க்கும்போது அது குறைவு தான் என்றாலும், தோனியே தனக்கு பணம் தேவையில்லை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தன்னால் இயன்றதை செய்ய தயாராகவே இருக்கிறேன் என்கிறார். அதற்கு மேல் என்ன வேண்டும்?. தோனி ஒரு மேட்ச் வின்னர். அதனால், அவரை இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பை ஐபிஎல் நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.


சிஎஸ்கே அணிக்கு அதிர்ஷ்டம்


முகமது கைப் சொல்வதும் உண்மை தான். ஐபிஎல் நிர்வாகம் இந்த விதிமுறையை கொண்டு வராவிட்டால் தோனி இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான். ஏனென்றால், பிளேயர் ரீட்டென்ஷனில் தோனியை தக்க வைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய தொகையை செலவிட வேண்டியிருந்திருக்கும். அதனால், நல்ல பிளேயர்களை அணிக்கு ஏலத்தில் கொண்டு வரமுடியாமல் போகவும் வாய்ப்புள்ளது. அதனை வைத்து தான் தோனியும் கடந்த ஐபிஎல் போட்டியின்போது சூழலுக்கு ஏற்ப ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது குறித்து என்னுடைய முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இப்போது ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த புதிய விதிமுறை அறிமுகம் காரணமாக, வெறும் 4 கோடிக்கு தோனியை தக்க வைத்துக் கொண்டு நல்ல பிளேயர்களை பெரிய தொகைக்கு தக்க வைக்கலாம். அல்லது ஏலத்தில் அந்த தொகையை செலவிட்டு பெரிய பிளேயர்களை அணிக்கு கொண்டு வர முடியும். இதை கருத்தில் கொண்டே ஐபிஎல் நிர்வாகம் தோனிக்காக விதிமுறையை மாற்றியிருப்பதாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | IND vs BAN: இந்திய அணியின் பிளேயிங் லெவன்... ஓப்பனிங்கில் யார்? கம்பீர் பிளான் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ