ஐபிஎல் செய்திகள்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து லக்னோ அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. சென்னையிடம் தோல்வி அடைந்ததை அடுத்து, இப்போது லக்னோ அணிக்குள் ஒரு நட்சத்திர வீரருக்கும் இடம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வீரர் பேட்டிங்கில் அதிரடியை காட்டும் திறமையை பெற்றவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லக்னோ அணிக்கு மீண்டும் திரும்பிய வீரர்:
குயின்டன் டி காக் மீண்டும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா வீரரான இவர், நெதர்லாந்துக்கு எதிரான தொடரில் விளையாடி வந்தார். ஒருநாள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற தென்னாப்பிரிக்காவுக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானது. இதனால் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் அவரால் விளையாட முடியவில்லை. இப்போது அவரது வருகை லக்னோ அணியின் பேட்டிங்க்கு மேலும் வலு சேர்க்கும்.


மேலும் படிக்க: ஆல்-ரவுண்டருக்கு டாட்டா... மாஸ் ஓப்பனருக்கு ஒப்பந்தம்... பக்கா பிளான் போட்ட ஐபிஎல் அணி!


அதிரடி பேட்டிங்க்கு பெயர் பெற்றவர்:
குயின்டன் டி காக் இதற்கு முன்பு லக்னோ அணிக்காக பல போட்டிகளில் திறமையாக விளையாடி உள்ளார். எந்த ஒரு பந்து வீச்சையும் கிழித்து எறியும் திறமை அவருக்கு உண்டு. கடந்த சீசனில் லக்னோ அணிக்காக டி காக் சிறப்பாக செயல்பட்டார். 15 போட்டிகளில் ஒரு அபார சதம் உட்பட 508 ரன்கள் எடுத்தார். அவர் இதுவரை 92 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2764 ரன்கள் எடுத்துள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது அடுத்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஏப்ரல் 7ஆம் தேதி விளையாடவுள்ளது.


லக்னோ அணியில் யார் ஓப்பனிங் செய்வார்கள்:
குயின்டன் டி காக் இல்லாத நிலையில், வெஸ்ட் இண்டீஸின் கைல் மேயர்ஸ் கே.எல்.ராகுலுடன் களமிறங்கினார். மேயர்ஸ் தனது பேட்டிங்கில் அற்புதமாக செயல்பட்டு அனைவரது மனதையும் கவர்ந்தார். அவர் இரண்டு ஆட்டங்களிலும் 2 அரை சதங்கள் உட்பட 63 சராசரியில் 126 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 210. ஆனால் இப்போது டி காக் திரும்பிய பிறகு, ராகுலுடன் யார் ஓப்பனிங் செய்வார் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.


மேலும் படிக்க: யார் இந்த சாய் சுதர்ஷன்? விரைவில் இந்திய அணியில்... பாராட்டி தள்ளிய ஹர்திக் பாண்டியா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ