Bumrah Health Update: நீண்ட நாள்களாக காயத்தால் அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, இந்திய அணிக்கு எப்போது திரும்புவார் என்ற கேள்விதான் தற்போது அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது, 4ஆவது டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் பும்ரா இடம்பெறாதது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர், இலங்கை தொடரின்போதே காயத்தில் இருந்து மீண்டும் விட்டார் என கூறப்பட்ட நிலையில், அவர் என்சிஏவில் உடற்தகுதியை நிரூபிக்கவில்லை என்பதால் அவர் இலங்கை தொடரில் இருந்து விலகினார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை, டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் பங்கேற்காதது இந்திய அணிக்கு பலத்த சேதாரத்தை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு பும்ராவை தயார் படுத்த பிசிசிஐ பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. 


இருப்பினும், வீரர்களுக்கான வேலைப்பளூ குறித்தும் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது. எனவே, ஒருவேளை அவர் ஐபிஎல் தொடர் பங்கேற்றாலும், அடுத்து நடைபெற உள்ள உலக டெஸ்ட சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும் என்பதால், ஐபிஎல் தொடரில் பும்ரா விளையாடுவது குறித்தும் பிசிசிஐ தீவிரமாக ஆலோசிக்கும் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க | IND vs AUS: கேஎல் ராகுலுக்கு செக் வைத்த பிசிசிஐ! அணியில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!


கடந்த பத்து நாள்களுக்கு மேலாக, அவர் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் விளையாடி வருவதாகவும், இருப்பினும் அவருக்கு தேசிய அணியில் பங்கேற்பதற்கு தகுதிபெற வேண்டிய தடையில்லா சான்று அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அவர் உடற்தகுதி இன்னும் முழுமை பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. 



அவரால் ஐபிஎல் தொடரில்தான் விளையாட முடியும். ஐபிஎல் தொடரில் விளையாட நிபந்தனை உடன் கூடிய தடையில்லா சான்று அளிக்கப்படுவது வழக்கம்தான் என்பதால், பும்ராவுக்கு அதில் பிரச்னை இருக்க வாய்ப்பு குறைவு. வலைப்பயிற்சியின் போது, 24 பந்துகளை தாண்டி பந்துவீச வேண்டாம் என ஐபிஎல் தொடரின்போது, வெளிநாட்டு பந்துவீச்சாளர்களுக்கு அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவுரை வழங்குவது வாடிக்கைதான். அதேபோலவே, பும்ரா போன்ற இந்தியா பந்துவீச்சாளர்களுக்கும் பிசிசிஐ அறிவுறுத்த வாய்ப்புள்ளது. 


பும்ரா கடைசியாக, கடந்த செப். 25ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடியிருந்தார். சமீபத்தில், Zee Media நடத்திய ஸ்டிங்க் ஆப்ரேஷனில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா, பும்ராவின் உடற்தகுதி குறித்தும் பேசியிருந்தார். அவர் பேசிய பல கருத்துகள் புயலை கிளப்பிய நிலையில், அவர் தனது பதவியை கடந்த பிப். 17 ராஜினாமா செய்தார்.


இதனால், நேற்று கொல்கத்தாவில் கூடிய தேர்வுக்குழு, தலைவர் இல்லாமல் அணியை தேர்வு செய்தது. தேர்வுக்குழு உறுப்பினர்களான சுப்ரோதோ பானர்ஜி, சலில் அன்கோலா, எஸ்எஸ் தாஸ் மற்றும் எஸ் ஷரத் ஆகியோருடன் பிசிசிஐ செயலர் ஜெய் ஷா மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் அணி தேர்வுக் கூட்டத்தை நேற்று மாலை நடத்தியுள்ளனர். 


மேலும் படிக்க | IPL 2023: முக்கிய வீரர் மீண்டும் காயம்! சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ