அம்பயர்களுடன் விவாதம்! ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் தோனி விளையாட தடை?
இந்தியன் பிரீமியர் லீக் 2023 இறுதிப் போட்டியில் எம்எஸ் தோனிக்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. தகுதிச் சுற்று 1-ன் போது அவர் வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தார் என கூறப்படுகிறது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இறுதிப் போட்டியில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிக்கு தடை விதிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஒருமுறை மெதுவாக பந்து வீசியதற்கு நடத்தை நெறிமுறைக்காக அபராதம் தோனிக்கு விதிக்கப்பட்டது. இப்போது மே 28 அன்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போக வாய்ப்பு உள்ளது. சென்னை அணி நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸை 15 ரன்கள் வித்தியாசத்தில் சொந்த மைதானமான MA சிதம்பரம் ஸ்டேடியத்தில் வீழ்த்தி சாதனை படைத்து 10வது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. GT vs CSK குவாலிஃபையர் 1 மோதலின் போது, தோனி நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் போட்டியில் நான்கு நிமிட தாமதம் ஏற்பட்டது.
மதீஷா பத்திரனா டைட்டன்ஸ் அணியின் சேசிங் போது சிறிது நேரம் ஓய்வு எடுக்க சென்றார். ஐபிஎல் நிபந்தனைகளின்படி, எட்டு நிமிடங்களுக்கு மேல் மைதானத்தை விட்டு வெளியேறும் எந்த வீரரும், மீண்டும் திரும்பிய பிறகு, அவர் பந்து வீச அனுமதிக்கப்படும் முன்பு அதே அளவு நேரம் மைதானத்தில் இருக்க வேண்டும். ஆனால் பத்திரனா மைதானத்திற்கு திரும்பியதும் பந்து வீச தயாரானார். குஜராத் டைட்டன்ஸ் 30 பந்துகளில் வெற்றி பெற 71 ரன்கள் தேவை என்ற நிலையில், 6 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்திருந்தது.
மேலும் படிக்க | ஐபிஎல் போட்டிகளில் ஆரஞ்சு தொப்பியை பெறாத துரதிருஷ்டசாலி கிரிக்கெட்டர்கள்
ஓவருக்கு முன்பாக நடுவர் அனில் சௌத்ரி பத்திரனாவுடன் உரையாடுவதை தோனி கவனித்தார். பத்திரனா ஒன்பது நிமிடங்களுக்கு மேல் வெளியேறியதாகவும், அவர் பந்துவீச முடியுமா இல்லையா என்பது பற்றிய விவாதம் களத்தில் இருந்தது. பத்திரன பந்துவீசுவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்க வேண்டும் என்று அம்பயர்களால் தோனிக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் கடைசி ஓவர் தொடங்கவில்லை என்றால், ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக அபராதம் மற்றும் வட்டத்திற்கு வெளியே நான்கு பேரை மட்டுமே நிறுத்த வேண்டும். இந்த காரசார விவாதங்கள் நடந்து முடிய எட்டு நிமிடங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டது, பின்பு பத்திரன பந்து வீச அனுமதிக்கப்பட்டார். அம்பயர்கள் தோனி மீது குற்றம் சாட்டினால் அவர் பைனல் போட்டியில் விளையாடாமல் போவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2023 குவாலிஃபையர் 2ல் குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் மோத உள்ளது, புதன்கிழமை நடந்த எலிமினேட்டர் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியை வீழ்த்தியது. மார்கஸ் ஸ்டோனிஸ் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, நவீன்-உல்-ஹக்கின் வேகத்தில் சிக்கி 4 விக்கெட்டுகளை அவரிடம் பறி கொடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 182/8 ரன்களை எட்டியது. கேமரூன் கிரீன் 41 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும் எடுத்தனர், இருப்பினும், மும்பை அணி சார்பில் ஆகாஷ் மத்வால் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்களை கைப்பற்றினார்.
மேலும் படிக்க | தோனியுடன் ஜடேஜா மீண்டும் மோதலா? டிவிட்டர் பதிவும் ரசிகர்களின் ரியாக்ஷனும்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ